அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வடகிழக்கு பருவமழையையொட்டி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. 1.50 லட்சம் மின் கம்பங்கள் தயாராக உள்ளன.

செந்தில் பாலாஜி

உலத்திலேயே பெரிய கரகாட்ட கோஷ்டி எது என்ற காமெடியை பார்த்திருப்பீர்கள். கோட்டை ஈஸ்வரன் கோயிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் படித்தது கோமாளிதான். இதைவிட கோமாளித்தனம் வேறு எதுவும் இல்லை.

கோமாளி சொல்லக்கூடியதற்கான கேள்விகளை தவிர்த்துவிடுங்கள். உங்களை எல்லாம், புறக்கணித்துக் கொள்ளுங்கள் என்று நேரடியாக கருத்துத் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகும் கோமாளி குறித்த கருத்தைக் கேட்கிறீர்களே.

அண்ணாமலை

தயவு செய்து கோமாளி குறித்த கேள்வியை விடுங்கள். நாட்டு மக்களுக்கான கேள்வியை கேளுங்கள். தமிழ்நாடு முழுவதும் அரசு இயந்திரம், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது.

முதல்வர் கலந்துகொள்ளும் சிறப்புத் திட்ட நிகழ்ச்சிகள் தலைப்பு மற்றும் முதன்மை செய்திகளாக இடம்பெறுவதில்லை. அது இரண்டாம் செய்தியாகத்தான் வருகிறது. சில நேரங்களில் கோமாளியின் செய்திகூட முன்னிலை பெறுகிறது. செய்திகள் வெளியிடுவதில் நாங்கள் தலையிடுவதில்லை.

முதல்வர் ஸ்டாலின்

தொலைக்காட்சி நிறுவனத்தையோ, பத்திரிகைகளையோ ஆளுங்கட்சியிலிருந்து மிரட்டியிருக்கிறார்களா… நேற்று கோமாளி சொன்னதைப் போல, நாங்கள் கூறியிருக்கிறோமா?” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.