உலகம் முழுவதும் நோயால் ஏற்படும் உயிரிழப்புகளில் பக்கவாதம் முன்னணி வகிக்கிறது. ஓராண்டில் சராசரியாக 1 கோடியே 45 லட்சம் மக்கள் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகின்றனர் அவர்களில் 55 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளது என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

Brain Stroke – Representational Image

அதே சமயம் உலகம் முழுவதிலும் 8 கோடி மக்கள் பக்கவாதத்திலிருந்து மீண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் 5 கோடி பேர் பக்கவாதத்தால் ஏற்பட்ட குறைபாடுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

பக்கவாதத்தின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, விரைந்து மருத்துவமனையை அணுகி, சிகிச்சை பெறுவதன் மூலம் நோயின் பாதிப்பு தீவிரமாகாமல் தடுக்க முடியும். உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு அவள் விகடன் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து `பக்கவாதம்…கண்டறியும் முறைகளும்! சிகிச்சைகளும்’ என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி அக்டோபர் 29-ம் தேதி (சனிக்கிழமை) ஆன்லைனில் நடத்த உள்ளன.

brain

அம்மருத்துவமனையின் தலைமை மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர் ஜோஸ் ஜாஸ்பர், நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பி. அருண் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

பக்கவாதத்தின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி, பக்கவாதம் வராமல் தடுக்க முடியுமா, நோய் பாதித்த பின்பான சிகிச்சை முறைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்குவார்கள். இதுதவிர, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் சந்தேகங்களுக்கும் மருத்துவர்கள் விடையளிப்பார்கள்.

பக்கவாத அறிகுறிகளை கண்டறிவது எப்படி

அக்டோபர் 29-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 முதல் 6 மணி வரை ஆன்லைனில் நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.