இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே சுவாரசியத்திற்கும், ரசிகர்களின் உணர்ச்சி பெருக்கிற்கும் பஞ்சம் இல்லாத அனல்பறக்கும் போட்டியாக தான் இருக்கும். அதுவும் உலககோப்பை போட்டிகள் என்றாலே அதன் வீரியம் ரசிகர்களிடையே அதிகமாகவே இருக்கும். அப்படி நடக்கும் போட்டிகளில் எல்லாம் முன்னர் இந்தியாவின் ஆதிக்கமே அதிகமாக இருந்து வந்த நிலையில். கடந்த சாம்பியன் ட்ரோபி இறுதிபோட்டியில் இருந்து கடந்த 2021 டி20 உலககோப்பை லீக் போட்டிவரை வாங்கிய அடிக்கெல்லாம் சேர்த்து வைத்து பதிலடி கொடுத்து வருகிறது பாகிஸ்தான் அணி.

அந்த வகையில் இந்த 2022 ஆம் ஆண்டின் உலககோப்பை போட்டிக்கும் அதிக எதிர்ப்பார்ப்பு இந்திய பாகிஸ்தான் மக்கள் ரசிகர்கள் இடையே மட்டுமில்லாமல், உலக கிரிக்கெட் ரசிகர்கள் இடையேயும் தொற்றி உள்ளது. அதன் காரணமாக தான் உலகின் பெரிய ஆடுகளமான மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்த போட்டியை காண சுமார் 90,000 பார்வையாளர்கள் வரை போட்டியைக்காண வரவி்ருக்கின்றனர். ஒரு டி20 போட்டியை காண வரும் அதிக பார்வையாளர்கள் கொண்ட போட்டியாக இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி அமையவிருக்கிறது.

சரிக்கு சரியாக நிற்கும் இந்தியா பாகிஸ்தான் வீரர்கள்:

ரோகித் & ராகுல் – ஷாஹீன் அப்ரிடி

image

இந்திய அணியின் பலம் என்றால் அது பேட்டிங் வரிசை தான், சிறப்பான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கிறது இந்திய அணி. அந்த வகையில் ஓப்பனரான ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவருக்கும் டஃப் கொடுக்கும் வீரராக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இருக்கிறார். இடது கை பந்துவீச்சாளர்களுக்கு எப்போதும் விக்கெட்டை இழக்கும் வீரர்களாகதான் இன்று வரை இந்திய அணியின் ஓப்பனர்களான ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இருக்கின்றனர். ஷாஹீன் அப்ரிடியை பார்த்து விளையாடி விட்டால் இந்தியாவிற்கு பெரிய ஆபத்தாக இருப்பதாக தெரியவில்லை

முகமது ரிஸ்வான் & பாபர் அசாம் – புவனேஷ்வர் குமார்

image

பாகிஸ்தான் அணியின் பெரிய பலமாக இருப்பது இரண்டு டாப் ஆர்டர் பேட்டர்கள் தான். இருவரும் மேட்ச் வின்னிங்க் பிளேயராக இருப்பது அந்த அணிக்கு எப்போதும் அசுர பலமாக இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் இரண்டு வீரர்களும் வேகம் குறைவான ஸ்விங்கிங் பந்துகளில் 10 – 15 முறை விக்கெட்டை பறிகொடுத்திருப்பதால், இரண்டு வீரர்களுக்கும் டஃப் கொடுக்கும் வீரராக புவனேஷ்வர் குமார் இருப்பார். அர்ஸ்தீப் சிங்கும் பவர்பிளேவில் சிறப்பாக செயல்படக்கூடியவர் என்பதால் அவரும் சிறந்த டஃப் வீரராக இருப்பார்.

இந்தியா மிடில் ஆர்டர்கள் – முகமது நவாஸ்

image

இடது கை ஆர்தோடாக்ஸ் பந்துவீச்சாளரான முகமது நிவாஸ் இந்தியாவின் மிடில் ஆர்டர்களுக்கு டஃப் கொடுக்க வாய்ப்பு அதிகம்.

பாகிஸ்தான் மிடில் ஆர்டர்கள் – அக்சர் பட்டேல்

image

வலது கை பேட்டர்கள் அதிகம் இருப்பதால் அக்சர் பட்டேல் பாகிஸ்தான் மிடில் ஆர்டர் பேட்டர்களுக்கு எதிரான சிறந்த வீரராக இருப்பார்.

போட்டிக்கு எதிரியாக இருக்கும் மழை:

மெல்போர்ன் நகரில் வெள்ளிகிழமை அன்று மழை அதிகமாக பதிவாகியுள்ளதால் போட்டி நடைபெறும் அன்றும் மழை குறுக்கிடுவது உறுதி என்று கூறப்படுகிறது. இந்த டி20 உலககோப்பையின் முக்கிய போட்டியாக கருதப்படும் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும்.

image

முதலில் 90 சதவீதம் மழை வர வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வானிலையில் முன்னேற்றம் இருப்பதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஓவர்கள் குறைவான போட்டிக்கும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.