ஆப்பிள் நிறுவனத்தின் ஐமெசேஜில் கூட இல்லாத பல பாதுகாப்பு அம்சங்கள் தனது நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் இருப்பதாக மெட்டா நிறுவனரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப் மற்றும் ஆப்பிளின் செய்தியிடல் சேவையான ஐமெசேஜ் (iMessage) ஆகிய இரண்டும் எப்போதும் ஒன்றுக்கொன்று எதிராகப் போட்டியிட்டு வருகின்றன. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் என அனைத்து தளங்களிலும் இயங்கும் நிலையில், ஐமெசேஜை ஆப்பிள் சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். பல ஆண்டுகளாக, வாட்ஸ்அப் எண்ணற்ற சந்தர்ப்பங்களில் ஆப்பிளின் ஐமெசேஜை விட பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

Mark Zuckerberg says it'll take three years to 'fix' Facebook - CNET

இப்போது, மெட்டா நிறுவனரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க் ஆப்பிள் நிறுவனத்தின் ஐமெசேஜ் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளார், “iMessage ஐ விட வாட்ஸ்அப் மிகவும் தனிப்பட்டது மற்றும் பாதுகாப்பானது. குழு அரட்டைகள் உட்பட ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு இரண்டிலும் வாட்ஸ்அப் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனுடன் வேலை செய்யும்.

Mark Zuckerberg lists security features that Apple's iMessage doesn't have  but WhatsApp does - India Today

ஒரு பொத்தானைத் தட்டுவதன் மூலம் வாட்ஸ்அப்பில் அனைத்து புதிய அரட்டைகளையும் மறைந்துவிடும்படி அமைக்கலாம். மேலும் கடந்த ஆண்டு நாங்கள் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட காப்புப்பிரதிகளையும் அறிமுகப்படுத்தினோம். இவை அனைத்தும் iMessage இல் இன்னும் இல்லை” என்று ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய நாட்களில் iMessage எந்த பெரிய புதுப்பிப்புகளையும் பெறவில்லை. ஆனால் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக வாட்ஸ்அப் தொடர்ந்து பாதுகாப்பு அம்சங்களை சோதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிரீமியம் சந்தா, எடிட் வசதி.. வரிசை கட்டி காத்திருக்கும் 5 முக்கிய வாட்ஸ்அப் அப்டேட்டுகள்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.