திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 25ஆம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவ.8 ஆம்தேதி சந்திர கிரகணத்தையோட்டி 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இந்த ஆண்டிற்கான சூரிய கிரகணம் வரும் 25ம் தேதியும், நவம்பர் 8ம்தேதி சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. அதன்படி வரும் 25ம்தேதி (செவ்வாய் கிழமை) மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும். இதனால், அன்று காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் மூடப்பட்டிருக்கும். அதன்பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

image

அதேபோல், நவம்பர் 8ம் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. அன்றைய தினமும் கோயில் கதவுகள் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை மூடப்பட்டிருக்கும். பிறகு கட்டணமில்லா தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த நாட்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும். எனவே விஐபி தரிசனம், ஸ்ரீ வாணி தரிசனம், ₹300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் கட்டண சேவைகளுக்கான அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், கட்டணமில்லா தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

பொதுவாக கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமைப்பதில்லை. எனவே, திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத பவன், தரிசனத்திற்கு செல்லும் வைகுண்டம் காம்பளக்சில் அன்னபிரசாதம் வழங்கப்படாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தள்ளது.

இதையும் படிக்க: கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தமிழக பெண்… அடையாளம் காண முடியாத அளவுக்கு அழுகிய உடல்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.