நியூசிலாந்து கடற்பகுதியில் 450 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரைப் பகுதிகளில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிரிழக்கும் சம்பவங்கள் உலகம் முழுவதும் அவ்வப்போது நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் கூட பல பகுதிகளில் திமிங்கலங்கள் பல முறை கரை ஒதுங்கி இறந்திருக்கின்றன. மணப்பாடு கடற்கரையில் 1973-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி 147 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஓரிரு நாட்கள் உயிரோடு இருந்த அவை பின்னர் இறந்துவிட்டன. சமீப ஆண்டுகளாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் கடற்கரைப் பகுதிகளில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.

Hundreds of whales wash up dead on New Zealand beach

நியூசிலாந்தின் சதாம் மற்றும் பிட் தீவுகள் அதிகளவில் திமிங்கலங்கள் வசிக்கும் பகுதியாக இருந்து வருகின்றன. சாத்தம் தீவில் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி சுமார் 215 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. இதனைத் தொடர்ந்து, அதற்கு மறுநாளே அருகிலுள்ள பிட் தீவில் 240 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. மொத்தமாக 455 திமிங்கலங்கள் இறந்துள்ளன. இவ்வளவு திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இறந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

In pics: 400 whales wash ashore on New Zealand beach, most die despite help  | World News - Hindustan Times

திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய பிறகு உயிரோடு இருக்கும் பட்சத்தில் அதனை மீண்டும் கடலில் மிதக்க விடுவதற்கான முயற்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், சதாம் மற்றும் பிட் தீவுகளில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் அப்படியே கடந்த சில நாட்களாக கிடக்கின்றன. கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

In pics: 400 whales wash ashore on New Zealand beach, most die despite help  | World News - Hindustan Times

நூற்றுக்கும் குறைவான மக்கள் வசிக்கும் அந்த தீவில் தளவாடப் பிரச்சினைகளைத் தவிர, அவற்றை மீண்டும் நீரில் மிதக்கச் செய்தால், சுறாக்கள் அவற்றை உணவாக்கிக் கொள்ளக் கூடும் என்ற அச்சுறுத்தல் காரணமாக திமிங்கலங்கள் கருணைக்கொலை செய்யப்பட்டதாக கடல் பாதுகாப்புத் துறையின் தொழில்நுட்ப ஆலோசகர் டேவ் லுண்ட்கிஸ்ட் தெரிவித்தார். இருப்பினும் திமிங்கலங்கள் இவ்வாறு கரை ஒதுங்கி இறப்பதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

In pics: 400 whales wash ashore on New Zealand beach, most die despite help  | World News - Hindustan Times

கடலின் ஆழமான பகுதிகளில் உயிர் வாழும் வெள்ளை சுறாக்கள் மிகவும் ஆபத்தானவை. இத்தகைய சுறாக்களால் மற்ற மீன் வகை உயிரினங்களுக்கு அதிக அளவில் ஆபத்து நிலவுகிறது. இவைகளில் வேட்டையாடும் தன்மையால் கொலையாளி திமிங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. அத்தகைய சுறாக்களினால் தான் திமிங்கலங்களின் வாழ்வியல் பாதிக்கப்படுவதாக உயிரியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.