கேரள மாநிலத்தில் தருமபுரியை சேர்ந்த பெண் ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டதாய் வெளியான தகவலை அடுத்து அப்பெண்ணின் கிராமம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

கேரள மாநிலத்தில் தமிழக பெண் உட்பட இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் தருமபுரியை சேர்ந்த பத்மா என்ற பெண்ணே நரபலி கொடுக்கப்பட்டவர் என முதலில் தகவல் வெளியானது. பத்மா தருமபுரி மாவட்டத்தில் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற தகவல் தெரியாமல் இருந்த நிலையில், நாகவதி அணை அருகேவுள்ள எர்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரங்கன் (70) என்பவரது மனைவி பத்மா என்பது தெரிய வந்தது.

image

இதனைத் தொடர்ந்து சம்பந்தபட்ட எர்ரப்பட்டி கிராமத்திற்கு பெரும்பாலை காவல் நிலைய உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தினர். அப்பொழுது தோட்ட வேலைக்கு சென்ற பத்மா கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியானது.  இதையடுத்து பத்மாவின் கிராமமே பரபரப்புக்குள்ளானது. மேலும் பத்மாவின் உடலை அடையாளம் காண, பத்மாவின் மகன்களான சேட்டு, செல்வராசு, பத்மாவின் தங்கை பழனியம்மாள், உறவினர்கள் முத்து, தட்சினாமூர்த்தி, ராமு, முனியப்பன் மற்றும் காசி உள்ளிட்ட உறவினர்கள் கேரளாவிற்கு சென்றுள்ளனர்.

image

பத்மா மற்றும் அவரது கணவர் ரங்கன் ஆகேியார் கடந்த 20 வருடகளுக்கும் மேலாக கேரளாவில் பணிபுரிந்து வருவதாகவும், தீபாவளி, பொங்கல், வீட்டு விசேசங்கள், கோவில் திருவிழாக்களுக்கு அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வார்கள் என்றும் தெரியவந்துள்ளது. வயது மூப்பு காரணமாக ரங்கன் சொந்த கிராமமான எர்ரப்பட்டி கிராமத்திலேயே இருந்து வருகிறார். இதனால் பத்மா மற்றும் அவரது தங்கை பழனியம்மாள் ஆகியோர் கேரளாவில் பணி செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பத்மாவின் உடலை அடையாளம் காண பத்மாவின் தங்கை பழனியம்மாள், மற்றும் மகன் செல்வராசு, உறவினர்கள் ராமு முனியப்பன் நான்கு பேரை பத்தினம்திட்டா என்ற இடத்தில் அறை ஒன்றில் கேரள காவல் துறையினர் அடைத்து வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து அவர்களேவும் தருமபுரியிலுள்ள உறவினர்களுக்கு கேரளாவிலிருந்து செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து வருவதாக பத்மாவின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

image

இந்த நிலையில் நரபலி கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இடத்தில், தோண்டி எடுக்கப்படும் உடல் அழுகிய நிலையில் இருப்பதால், உயிரிழந்தது பத்மா தானா என அடையாளம் காணமுடியவில்லை என கேரளாவிலிருந்து தகவல் கிடைத்து வருவதாகவும் தருமபுரியிலுள்ள பத்மாவின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் தருமபுரி பெண் கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தால், அவரது சொந்த ஊரான எர்ரப்பட்டி கிராமமே பரபரப்பிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளது. இதில் முழுமையான உறுதியான தகவல்கள் கிடைக்காததால் கிராம மக்கள் குழப்பத்திலும் இருந்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.