சுமார் 3500 கி.மீ பாதயாத்திரையாக செல்லும் நடைபயணத்தை தொடங்கினார், தேர்தல் வியூகவாதியாக மாறிய அரசியல் ஆர்வலரான பிரசாந்த் கிஷோர். மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பிதிஹர்வா ஆசிரமத்தில் இருந்து மாநிலம் தழுவிய நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன், அடிமட்டத்தில் உள்ள மக்களுடன் உரையாடி, அவர்களின் பிரச்னைகளை கண்டறியும் நோக்கத்துடன், ‘ஜான்சுராஜ்’ பரப்புரையின் கீழ், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், சுமார் 3500 கி.மீ., நடக்க உள்ளார்பிரசாந்த் கிஷோர். 1917ல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக மகாத்மா காந்தி தனது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடத்திலிருந்து பிரசாந்த் கிஷோர், தனது நடைப்யணத்தை தொடங்கியிருக்கிறார்.

image

இது குறித்து அவர் கூறுகையில், “நான் சுமார் 3500 கிலோமீட்டர்கள் நடந்து சென்று மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதி மற்றும் பெரும்பாலான பஞ்சாயத்துகளை அடைய முயற்சிப்பேன். பாதயாத்திரையை முடிக்க ஒன்றரை வருடங்கள் ஆகும், அதன் போது நான் பாட்னா அல்லது டெல்லிக்கு செல்லமாட்டேன், ”என்று அவர் கூறினார்.

image

மேலும், “இந்தப் பாதயாத்திரையின் அடிப்படையில் மூன்று நோக்கங்கள் உள்ளன – சரியான நபர்களைக் கண்டறிந்து அவர்களை ஒரு பொதுவான ஜனநாயகத்தில் கொண்டு வருவது. அடிமட்டப் பிரச்சினைகளைக் கண்டறிந்து, இறுதியாக, அடுத்த 15 ஆண்டுகளில் 10 முக்கியத் துறைகளின் வளர்ச்சியின் மூலம் பீகாரின் முழுமையான வளர்ச்சிக்கான தொலைநோக்கு ஆவணத்தைத் தயாரித்து, நகரங்கள் மற்றும் பஞ்சாயத்துகளின் வளர்ச்சிக்கான வரைபடத்தை உருவாக்குவது” என்று அவர் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.