பாகிஸ்தானின் விமானப் போக்குவரத்து மற்றும் ரயில்வே அமைச்சர் கவாஜா சாத் ரபீக், தேசிய கேரியரின் சேவையை மேம்படுத்த PIA அதிகாரிகளுடன் சந்திப்பில், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், அவர்களது கேபின் குழுவினருக்கு, உடை விதிமுறைகளைப் பற்றி அறிவுறுத்திய செய்தி பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்கா முழுவதும் என 18 உள்நாட்டு  மற்றும் 25 சர்வதேச இடங்களுக்குச் சேவை செய்யும் இந்த விமான நிறுவனம் தினசரி கிட்டத்தட்ட 100 விமானங்களை பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்  இயக்குகிறது.

இந்நிலையில் பிஐஏ, ‘சில கேபின் பணியாளர்கள் நகரங்களுக்கு இடையே பயணம் செய்யும் போதும், ஹோட்டல்களில் தங்கும் போதும், பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போதும் முறையான ஒரு உடை அணியாமல் இருக்கிறார்கள். அத்தகைய ஆடை அணிவது அந்த நபர்கள் மீது மட்டுமின்றி அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மீது மோசமான அபிப்பிராயத்தை உண்டாக்கும். அதனால் கேபின் குழுவினர் அனைவரும் பாகிஸ்தானின் கலாச்சாரம் மற்றும் தேசிய ஒழுக்கங்களுக்கு ஏற்ப ஆடைகளும் இருக்க வேண்டும் ’’ என்று தெரிவித்தது.

image

இந்த அறிவுரை ஊகடங்களில் வெளியாகி நேற்று சர்ச்சையானதைத் தொடர்ந்து, இன்று பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி, ’’பணியாளர்களுக்கு ஆடை விதிமுறைகள் பற்றின அறிவுரை கூறும் போது சில வார்த்தை பயன்பாடு தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டு விமர்சனத்துக்குள்ளாகப்படுகிறது. இதற்கு நாங்கள் வருந்துகிறோம் ’’ என விளக்கமளித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.