திருமணங்கள் ஒரு பக்கம் கொண்டாட்டமான தருணமாக கருதப்பட்டாலும் அந்த நிகழ்ச்சிகளின்போது நடக்கும் பல்வேறு சலசலப்பு நிறைந்த நிகழ்வுகளே எப்போதும் பேசப்படக் கூடிய ஒன்றாக இருக்கக் கூடும். இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் நிகழக் கூடிய கேலிகளுக்கும், பரபரப்புகளுக்கும் எப்போதும் பஞ்சமே இருக்காது.

அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா பகுதியில் நடந்த திருமண விழாவுக்கு வந்த விருந்தினர்களிடம் ஆதார் கார்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டிருந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அம்ரோஹாவின் ஹசன்புர் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அங்கு நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்கச் சென்ற ஒரு குடும்பத்தினரிடம் மண்டபத்தில் இருந்தவர்கள் இதுவரை கேள்விப்படாத ஒன்றை கேட்டிருக்கிறார்கள். அதாவது, மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்பே வந்த விருந்தாளிகளிடம் ஆதார் கார்டை காட்டும்படி கறார் காட்டியிருக்கிறார்கள்.


அவ்வாறு ஆதார் வைத்திருக்காதவர்களை திருமணத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லையாம். இதுபோக ஆதார் கார்டு காண்பித்தால் மட்டுமே சாப்பாடு போடப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

ஏனெனில், கடந்த செப்டம்பர் 21ம் தேதி சம்பவம் நடந்த இடத்திற்கு ஒரே நேரத்தில் இரண்டு விதமான பராத் வாகனங்கள் வந்ததை அடுத்து மணமகளின் குடும்பத்தினர் வருத்தமடைந்து உணவு வழங்குவதை நிறுத்த முடிவு செய்தனர்.

கூட்டத்தை சமாளிக்க ஆதார் அட்டையை காட்ட வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைத்தனர். இருப்பினும், திருமணத்தின் உண்மையான விருந்தினர்கள் அந்த நேரத்தில் அவர்களின் அடையாளச் சான்று இல்லாததால், அவர்களும் சரி செய்யப்பட்டனர். இந்த சூழ்நிலை விருந்தினர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது, ஆனால் சிலர் இரு தரப்பு மக்களையும் சமாதானப்படுத்தி விருந்தினர்களை கவனித்திருக்கிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.