65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுகோள் பூமியை நோக்கி வந்து பயங்கர தாக்குதலை ஏற்படுத்தியதால்தான் பூமியிலிருந்த டைனோசர்களும் மற்ற உயிரினங்களையும் அழிந்தது எனக் கூறப்படுகிறது. 

பூமியின் சுற்றுப்பாதையில் 3 கோடி மைல்களுக்குள் மற்ற சிறிய கோள்களோ அல்லது விண்கற்களோ வந்து பூமியினை தாக்க சாத்தியக்கூறுகள் அதிகம் இருந்துவருகிறது. இதனால் பூமியைக் காப்பாற்ற விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுப் பணியிலும் ஆராய்ச்சியிலும் ஈடுப்பட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, ‘கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகத்தை (பிடிசிஓ)’ நிறுவியுள்ளது.

image

பூமியின் மேற்பரப்பைச் சேதப்படுத்தும் அளவிற்கு நெருங்கி வரும் அபாய விண் பொருட்களை 9 மில்லியன் கிலோமீட்டர் தொலைவிலேயே கண்காணித்து, அதை வகைப்படுத்தி பூமியை நெருங்கும் முன்பே அந்த பொருட்களைத் திசை மாற்றும் தொழில்நுட்பத்தைக் கொண்ட நாசா இந்த புதிய  திட்டத்துக்கு டார்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதாவது ‘இரட்டை சிறுகோள் திசைதிருப்பல் சோதனை (டார்ட்)’ ஆகும்.

டார்ட் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் விண்கலம் 24,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து பூமியை நோக்கிவரும் சிறுகோள் அல்லது கற்கள் மீது மோதி வெடிக்கும். இந்த வெடிப்பால் கோளின் சுற்றுபாதையில் மாற்றம் ஏற்படுத்தி திசைதிருப்பவும் வேலை நடைபெறும்.

இந்த டார்ட் திட்டத்தின், முதற்கட்டமாகப் பூமியின் சுற்றுப்பாதையில் பயணித்த , டிடிமோஸ் பைனரி என்ற சிறுகோளை நாசாவின் விண்கலம் தாக்கி, அதன் திசையை மாற்றியது. இதன் நேரடி ஒளிபரப்பையும் நாசா பொதுமக்களின் பார்வைக்கு இன்று வெளியிட்டது.

image

சுமார் 2500 அடி அகலம் கொண்ட டிடிமோஸ் என்ற சிறுகோள் பூமியைச் சுற்றி வந்தது. இந்த சிறுகோளை அழிப்பது நாசாவின் குறிக்கோள் அல்ல. அந்த சிறுகோளின் மீது தாக்கி அதனை அதன் சுற்று வட்டப் பாதையிலிருந்து திசைதிருப்புவதே நோக்கமாகும். நாசாவின் டார்ட் விண்கலம் வினாடிக்கு சுமார் 15,000 மைல் வரை வேகத்தில் பயணித்து மோதி வெடித்தது. அதன் பின்பு விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த லிசியாகியூப் எனப்படும் சிறிய செயற்கைக்கோள் ஒன்று, குறுங்கோளில் இருந்து 25 முதல் 50 மைல்களுக்குள் சில நிமிடங்களில் பறந்து, சிறுகோளின் சுற்றுப்பாதையைச் சிறிது திசை திருப்பியது.

உலகில் முதன்முதலாக பூவியை மற்ற விண்பொருட்களிடமிருந்து காக்கும் நாசாவின் இந்த டார்ட் திட்டத்திற்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது, இந்த  திட்டத்தை வெற்றிகரமான செய்து காண்பித்தது மூலம் எதிர்காலத்தில் விண்கற்கள் அல்லது கோள்களால் ஆபத்து ஏற்படுவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.