சாதித்து காட்டிய கூலித் தொழிலாளியின் மகள்.. மிஸ் தமிழ்நாடு பதட்டத்தை வென்று சாதனை..

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நால்வர் கோயில் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி மனோகர். இவரது மகள் ரக்சயா (20), கல்லூரி படிப்பை முடித்துள்ளார். தன்னுடைய சிறு வயது முதல் தான் அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு, குடும்ப வறுமையில் இருந்தபோதும் தனது சொந்த முயற்சியில் பகுதிநேர வேலை செய்து தன்னை தயார்ப்படுத்தி கொண்டிருக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்று கெளரவிக்கப்பட்டார்.  அதன் முயற்சியாக கடந்த பிப்ரவரி மாதம் Forever star india awards நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வாகினார்.

image

பின்னர் மாநில அளவிலான போட்டி இந்த மாதம் ஜெய்ப்பூரில் 18-ம் தேதி முதல் 21-ம் வரை நடந்த நிலையில் ஆயிரக்கணக்கானோர், இந்தியா முழுவதிலும் இருந்து வந்து கலந்து கொண்டதில் தமிழக பிரிவில் இளம்பெண் ரக்சயா மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

அதே போல் அனைத்து மாநிலங்களிலும் வின்னர், ரன்னர் என சுமார் 750 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். மேலும் வருகிற டிசம்பர் மாதம் மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் இந்தியா முழுவதும் தேர்வாகிய வின்னர், ரன்னர் என அனைவரும் ஸ்டேஜ் ஷோ செய்ய உள்ளனர். இதில் தேர்வாகும் நபர் மிஸ் இந்தியா பட்டத்தை வெல்ல உள்ளனர். நிச்சயம் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் செல்வேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் ரக்சயா.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.