ராஜஸ்தான் முதல்வராக உள்ள அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட இருக்கும் நிலையில், ராஜஸ்தான் மாநில புதிய முதல்வராக சச்சின் பைலட் தான் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் சச்சின் பைலட்டை முதல்வராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் உள்பட 70 எம்எல்ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்த நிலையில், கடைசியாக ராஜஸ்தான் முதல்வரான அசோக் கெலாட் மற்றும் திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் ஆகியோருக்கு இடையில் தான் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், அசோக் கெலாட்க்கு ஆதரவு அதிகமாக இருப்பதால், அசோக் கெலாட் தான் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை அசோக் கெலாட் தலைவராக தேர்வு செய்யப்பட்டால், ’ஒரு பதவிக்கு ஒரு நபர்’ என்ற கட்சியின் தீர்மானத்தின் அடிப்படையில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டியிருக்கும். அதனால் அடுத்த ராஜஸ்தான் முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

image

2018-ல் நடந்த ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு சச்சின் பைலட்டின் கடும் உழைப்பு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் முதல்வர் பதவியை , மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கு கொடுத்தது காங்கிரஸ் தலைமை. இதனால் அசோக் கெலாட்டுடனும், கட்சித் தலைமையுடனும் தொடர்ந்து அதிருப்தியைத் தெரிவித்து வந்தார் சச்சின் பைலட். இந்த அதிருப்தியைப் பயன்படுத்தி, சச்சின் பைலட்டை தன் பக்கம் கொண்டு வர பாஜகவும் பல முறை முயற்சித்துள்ளது. அதனால் அசோக் கெலாட் பிறகு அந்த இடத்தை சச்சின் பைலட்டுக்கு கொடுப்பது என காங்கிரஸ் தலைமை முடிவில் இருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ சாந்தி தரிவால் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 82 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.  அந்த கூட்டத்தில், அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராகத் தேர்வு செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

image

சச்சின் பைலட்டுக்கு பதவியைக் கொடுப்பதன் மூலம் ராஜஸ்தானில் நிலவி வந்த உள்கட்சி நெருகடிகள் முடிவுக்கு வரும் என காங்கிரஸ் தலைமை எதிர்ப்பார்த்த சூழல், தற்போது அசோக் கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் ஒரு புதிய கோரிக்கை ஏற்படுத்தி இருப்பதன் காங்கிரஸில் மீண்டும் ஒரு புதிய நெருக்கடி எழுந்துள்ளது. ஒருவேளை இந்த முறையும் சச்சின் பைலட்டுக்கு பதவியைக் கொடுக்காமல் சென்றால்,  சச்சின் பைலட்டை என்ன முடிவு எடுப்பார் என்று பதற்றமும் காங்கிரஸ் தலைமைக்கு அதிகரித்துள்ளது. அசோக் கெலாட்டுக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மனம் இல்லாததால் தான் தனது ஆதராவாளர்களை வைத்து இப்படியாக ஒரு புதிய பிரச்சனையை கிளம்பியுள்ளார் என சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களை குற்றம் சாட்டியுள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.