நமது நாட்டில் பெரும்பாலானோர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பர். இதற்கு முக்கிய காரணமாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த பிறகு மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் பொழுது அந்த நிறுவனத்திற்கு விருப்பமான வங்கியில் கணக்கு தொடங்க அவசியப்படலாம்.

Bank (Representational Image)

மேலும் குடும்பம், முதலீடு மற்றும் வணிகத்திற்காக தனித்தனி வங்கிக் கணக்குகள் வைத்திருப்பது நமது நாட்டில் வழக்கமானதே.. எனவே பல வங்கிக் கணக்குகள் வைத்திருப்பதற்கு பல காரணங்களும் உள்ளன. ஆனால் நுட்பமான கேள்வி இதுதான்.. ஒரு மனிதன் அல்லது ஒரு குடும்பத்திற்கு வாழ்வில் எத்தனை வங்கி கணக்குகள் போதுமானது?

வீட்டு செலவுக்காக தனி வங்கி கணக்கு

ஒரு குடும்பம் பல தனித்தனி வங்கி கணக்குகள் வைத்திருப்பதில் பல நன்மைகள் உள்ளன. உதாரணமாக, வீட்டு செலவுக்காக தனி வங்கி கணக்கு வைத்து ஒரு குறிப்பிட்ட தொகையை  மாதாமாதம் டெபாசிட் செய்து செலவு செய்தால் வீட்டுச் செலவு கட்டுக்குள் இருக்கும். .

அடுத்ததாக நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் திடீரென மெயின்டனன்ஸ் பிரேக்  ஆகியவற்றால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படலாம். எனவே கூடுதலாக மற்றொரு வங்கியில் கணக்கு வைத்திருந்தால் இந்தத் தலைவலி கிடையாது.

மேலும் இப்போதெல்லாம் குறிப்பிட்ட அளவை தாண்டி ATM அல்லது UPI மூலம் பரிவர்த்தனைகளை செய்தால் கூடுதல் கட்டணம் வசூல்  செய்கிறார்கள். .எனவே கூடுதலாக ஒரு வங்கி கணக்கு வைத்து பணம் எடுத்தால் அந்தக் கட்டணத்தை சேமிக்கலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பது நல்லதாக தென்பட்டாலும் நாம் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

செலவு செய்தல்…

குறைந்தபட்ச பராமரிப்பு தொகை (Minimum balance)

ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்குகளைத் தவிர ஏறக்குறைய அனைத்து சேமிப்பு கணக்கிலும் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்..குறைந்தபட்ச இருப்புத் தொகையை நாம் வைத்திருக்க தவறினால் வங்கிகள் கண்டிப்பாக   குறைந்தபட்ச பராமரிப்பு தொகையை பராமரிக்க தவறியதற்கான கட்டணத்தை விதிக்கும். நாம் ஒன்று அல்லது இரண்டு வங்கி கணக்குகள் வைத்திருந்தால் குறைந்தபட்ச இருப்பு தேவைகளை எளிதாக கண்காணித்து சமாளிக்கலாம். ஆனால் பல வங்கிக் கணக்குகளை வைத்திருந்தால் ஒவ்வொரு கணக்கிலும் இருப்புத் தொகையை பராமரிப்பது கடினம்.

பணம் எடுக்கும் வரம்பு (Withdrawal Limit)

சில சேமிப்பு கணக்குகளில் இணைக்கப்பட்டுள்ள டெபிட் கார்டுகளில்,ஒரு நாளுக்கு குறிப்பிட்ட தொகையை மட்டும் தான் எடுக்க வேண்டும் என்ற  வரம்பு இருக்கும். பெரும்பாலான சேமிப்பு கணக்குகளின் ஏ.டி.எம் மூலம் ஒரு நாள் பணம் எடுக்க ரூ. 25,000 அல்லது ரூ.50,000 என்பதாக இருக்கும்.

.அத்தகைய சூழ்நிலையில் சில வங்கிகளில் கணக்கு வைத்திருப்பது உதவியாக இருக்கும்.வெவ்வேறு கணக்குகளில் இருந்து தேவைக்கேற்ப பெரிய தொகையை எடுத்துக் கொள்ளலாம்.

பணம்

இந்தியாவில் நாம் எத்தனை சேமிப்பு கணக்குகள் வைத்திருக்கலாம் என்பதற்கு  வரம்பு எதுபும் கிடையாது. தேவைக்கேற்றவாறு பல வங்கிகளில் சேமிப்பு கணக்குகளை தொடங்கிக் கொள்ளலாம். ஆனால் நமது வங்கி கணக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பணப் பரிவர்த்தனைகள் இல்லாமல் இருந்தால் அது செயலற்ற கணக்காக குறிக்கப்படும். இதற்கு ஆங்கிலத்தில் டார்மட் அக்கவுண்ட் என்று பெயர். மேலும் கணக்கை செயலற்ற நிலையில் வைத்திருந்தால் அதற்கும் பல்வேறு கட்டணங்கள் விதிக்கப்படும்.இது இறுதியில் வங்கி இருப்பு குறைவதற்கு வழிவகுக்கும்.

வங்கிக் கட்டணங்கள் (Bank Charges)

வங்கிகள் பல சேவைகளை இலவசமாக வழங்குகின்றன ஆனால் பல்வேறு வசதிகள் கட்டணத்துடன் வருகின்றன. இந்தக் கட்டணங்கள் மக்களுக்கு தெரிவது கூட கிடையாது.  இதை  மறைமுக கட்டணங்கள் என்கிறார்கள். எனவே ஒரு வங்கியின் வாடிக்கையாளராக பல்வேறு கட்டணங்கள் குறித்து நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

பண நிர்வாகம்

மறைமுக கட்டணங்கள் பற்றி வங்கியின் இணையதளத்திலோ அல்லது கணக்கு தொடங்கும் படிவத்திலோ படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஒரு வங்கிக் கணக்கு அல்லது பல வங்கி கணக்குகள் வைத்திருந்தாலும் ‘ விரலுக்கு ஏத்த வீக்கம் ‘ என்ற சொல்லிற்கிணங்க செலவு செய்து வாழ்க்கை நடத்தினால்  நிதிச் சிக்கல் என்ற பேச்சே குடும்பத்தில் ஏற்படாது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.