அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உலகின் சக்தி வாய்ந்த தொலைநோக்கியாக கருதப்படும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பியது. விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட பின் இதுவரை காணாத ஆதி பிரபஞ்சத்தின் புகைப்படங்களை படம்பிடித்து அனுப்பி உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. அதன்பின் ஆரோராக்களுடன் கூடிய வியாழன் கோளின் வித்தியாசமான புகைப்படங்களை அனுப்பி திக்குமுக்காடச் செய்தது.

James Webb Space Telescope | Definition & Facts | Britannica

இன்னும் பல புகைப்படங்களை புவிக்கு அனுப்ப தனது பணியை மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த நிலையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மத்திய அகச்சிவப்பு கருவியில் (Mid-Infra Red Instrument – MIRI) தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 24ஆம் தேதி நடுத்தர தெளிவுத்திறன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி (மீடியம் ரேசொல்யூசன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி) அறிவியல் கண்காணிப்பு அமைப்பின் போது அதிகரித்த உராய்வைக் காட்டியதாக நாசா தெரிவித்துள்ளது.

NASA's James Webb telescope shows 'unprecedented' Jupiter views | Space  News | Al Jazeera

இதையடுத்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மேற்கொண்டிருந்த ஆய்வுப்பணிகள் செப்டம்பர் 6 ஆம் தேதி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. மத்திய அகச்சிவப்பு கருவியின் மற்ற 3 பாகங்களான இமேஜிங், குறைந்த தெளிவுத்திறன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மற்றும் கரோனாகிராப் ஆகியவை சீராக இயங்குவதால், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது என நாசா தெரிவித்துள்ளது.

Best discoveries by NASA James Webb Space Telescope so far; Check this list  | Tech News

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தொழில்நுட்பக் கோளாறை சந்திப்பது இது முதல்முறை அல்ல. இந்தாண்டு ஜூலை 19 ஆம் தேதி 19 சிறிய விண்வெளிப் பாறைகளால் தொலைநோக்கி சேதமடைந்தது. தொலைநோக்கியில் உள்ள 18 கண்ணாடிகளில் ஒன்றில் பாறை சற்று கடினமான சேதத்தை ஏற்படுத்தியதாக நாசா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.