உத்தரப்பிரதேச மாநில ஃபரூகாபாத்தில் உள்ள அஸ்தபல் தாராய் பகுதியில் ஆர்த்தி (24 ) என்ற பெண்ணுக்கு ரீல்ஸ் (குறுகிய வீடியோக்கள்) எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றும் பழக்கம் இருக்கிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக எல்லை மீறி சென்று வேடிக்கையான வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். இதன் காரணமாக அவரின் சகோதரர்களான ஆகாஷ் ராஜ்புத் மற்றும் அவரது மூத்த சகோதரர் ஜெய்கிஷன் ராஜ்புத் ஆகியோரின் நண்பர்கள் ஆர்த்தியை கேலி செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

மேலும், இந்த நாள்களில் ஆர்த்தி வித்தியாசமாக நடந்து கொண்டிருக்கிறார். எனவே, இரு சகோதரர்களும் ஆர்த்தியை ரீல்ஸ்கள் எடுக்க விடாமல் தடுத்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த ஆர்த்தி தனது இரண்டு இளைய சகோதரர்களையும் தாக்கி, அவர்களில் ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. அவரின் சகோதரர்களின் புகாரின் அடிப்படையில், ஆர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

காவல்துறை

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அளித்த தகவலில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆகாஷ் ராஜ்புத் அவரின் மூத்த சகோதரர் ஜெய்கிஷன் ராஜ்புத் ஆகியோர் காவல் நிலையத்திற்கு வந்து தனது சகோதரி ஆர்த்தி தன்னை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவரை விசாரிக்க காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தோம். ஆனால், காவல்நிலையத்தில் ஆகாஷைப் பார்த்து, அவரை மீண்டும் தாக்க முயன்றார். பெண் கான்ஸ்டபிள்கள் தலையிட்டு சமாதானப்படுத்த முயன்றபோது, ​​அவர் அவர்களையும் தாக்கினார்.

அவர்களின் சீருடைகளைக் கூட கிழித்தார். அந்த பெண் ஸ்டேஷன் பொறுப்பாளரிடமும் தவறாக நடந்து கொண்டார். எனவே குற்றவாளி மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரிவு 307 (கொலை முயற்சி) கீழ் ஒரு வழக்கும், இரண்டாவது பெண் காவலரை அடித்தது, சீருடையைக் கிழித்தது, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்த்தி கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்,” எனத் தெரிவித்திருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.