பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடுவோர் பலரும் உணவு டெலிவரி செய்யும் வேலையைதான் உலகெங்கிலும் பார்த்து வருகிறார்கள். சமயங்களில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் வேலையாவது இருக்கிறது என அனைத்தையும் சமாளித்துக்கொண்டு பணியாற்றுவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படி இருக்கையில் லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் உணவு, மளிகை பொருட்கள் போன்றவற்றை டெலிவரி செய்தே வாரத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்த்தால் கூட இந்த அளவுக்கு சம்பாதிக்க முடியாது என சிலாகிக்கிறார் அட்லான்ட்டா மார்டின்.

அப்ளிகேஷன்கள் நாம் சேவைகளைப் பெறுவதையும், நமக்கு தேவையான பொருட்களை வழங்குவதையும் மாற்றியுள்ளன என்பது உண்மைதான். இது நம் வாழ்க்கையை எளிதாக்கும் அதே வேளையில், வேலை கிடைக்காமல் போராடும் மக்களுக்கும் இது ஒரு வரமாக உள்ளது என்றும் கூறியுள்ளார் அட்லான்ட்டா.

image

22 வயதே ஆகும் அட்லான்ட்டா விமான நிர்வாகத்தின் முழு நேர பணியில் இருந்து விலகிவிட்டு டெலிவரி ஊழியராக தனது காதலருடன் இணைந்து பணியாற்றி வருகிறார். 11 மணிநேர வேலையில் அதிகமாக சம்பளம் வருவதாகவும் கூறுகிறார். அட்லான்ட்டாவும் அவரது காதலரும் சேர்ந்து யார் எவ்வளவு நேரம் பணியாற்றி எத்தனை ஆர்டர்களை டெலிவரி செய்கிறார்கள் என போட்டி போட்டுக் கொள்கிறார்களாம்.

Just Eat, UberEats, Beelivery, Deliveroo போன்ற டெலிவரி நிறுவனங்களில் அட்லான்ட்டா பணியாற்றி வருவதாக தெரிவித்திருக்கிறார். “முதலில் இந்த வேலையில் சேரும் போது லண்டனில் மட்டும்தாம் 24 மணிநேரமும் டெலிவரி செய்யக் கூடிய நிலை இருந்தது. ஆனால் டெலிவரி வேலைக்கான தேவை அதிகரித்ததை அடுத்து பிரிட்டனிலும் அது தொடர்ந்து வருகிறது. என்னுடன் பெண் இருப்பது ரொம்பவே உற்சாகமாகவும் உத்வேகமாவும் இருக்கிறது” என அட்லான்ட்டா மார்டின் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.