கோப்பைக்கான இறுதி யுத்தம்!

நாளை நடக்கவிருக்கும் சென்னை ஓப்பன் 2022 தொடரின் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போலந்தின் Magda Linette மற்றும் செக் குடியரசின் Linda Fruhvirtova மோதவிருக்கின்றனர்.

காயம் காரணமாக K.Swan விலகல். இறுதிப்போட்டியில் Magda Linette!

Magda Linette

இரண்டாவது அரையிறுதி போட்டியிலிருந்து காயம் காரணமாக K.Swan விலகவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் போலந்தின் Magda Linette.

சென்னை ரசிகர்களுக்கு நன்றி!

Linda Fruhvirtova

” நான் இதுவரை விளையாடிய போட்டிகளில் சிறந்த பார்வையாளர்களை கொண்ட மைதானம் இதுவே! ” சென்னை ரசிகர்களுக்கு நன்றி கூறிய Linda.

இறுதிப்போட்டியில் Linda Fruhvirtova!

Linda Fruhvirtova

அர்ஜென்டினாவின் Nadia Podoroska-வை 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சென்னை ஓப்பன் 2022 தொடரின் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் செக் குடியரசை சேர்ந்த 17 வயது Linda Fruhvirtova.

இரண்டாவது செட்டில் பதிலடி கொடுத்த Linda!

Linda Fruhvirtova

முதல் செட்டை இழந்த நிலையில் இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கில் அபாரமாக வென்றார் Linda Fruhvirtova. தொடங்கியது வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்.

Nadia Podoroska முன்னிலை!

Nadia Podoroska

முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் வென்றார் Nadia Podoroska.

இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள்!

WTA Chennai Open 2022

இன்று நடைபெறும் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டீனாவின் Nadia Podoroska உடன் மோதுகிறார் தொடரின் மிக இளைய வீராங்கனையான செக் குடியரசின் Linda Fruhvirtova.

இதை தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் பிரிட்டனின் Katie Swan மற்றும் போலந்தின் Magda Linette ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேற பலப்பரீட்சை நடத்தயிருக்கின்றனர்.

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய G.Dabrowski – L.Stefani ஜோடி!

G.Dabrowski – L.Stefani

சென்டர் கோர்ட்டில் நடைபெற்ற இரட்டையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் P.Plipuech – M.Uchijima ஜோடியை 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர் G.Dabrowski – L.Stefani இணை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.