கிரிக்கெட்டின் அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய முன்னாள் சர்வதேச வீரரும், ஐபிஎல் வீரருமான ராபின் உத்தப்பா இன்று (புதன்கிழமை) அறிவித்தார். இந்தியாவுக்காக 46 ஒருநாள் மற்றும் 13 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய உத்தப்பா, கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 20.90 சராசரியில் 230 ரன்கள் எடுத்தார் உத்தப்பா.

Robin Uthappa believes a stellar IPL performance will mark his return to  Team India - Sports India Show

ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் 205 போட்டிகளில் விளையாடி 4952 ரன்கள் குவித்துள்ள ராபின் உத்தப்பா இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக ரன் குவித்த முதல் பத்து வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். தனது ஓய்வை அறிவிக்கும் ட்வீட்டில், உத்தப்பா, “நான் தொழில்முறை கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கி 20 ஆண்டுகள் ஆகிறது. எனது நாட்டையும் மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவது மிகப்பெரிய கவுரவம் – ஏற்ற தாழ்வுகள் நிறைந்த அற்புதமான பயணம்; நிறைவான, பலனளிக்கும், சுவாரஸ்யமான மனிதனாக வளரவும் என்னை அனுமதித்த ஒன்று.


இருப்பினும், அனைத்து நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும். நன்றியுள்ள இதயத்துடன் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். நான் எனது குடும்பத்துடன் குறிப்பிடத்தக்க நேரத்தை செலவிட உள்ளேன். என் வாழ்க்கையில் ஒரு புதிய கட்டத்தை பட்டியலிட ஆவலுடன் காத்திருக்கிறேன்.

IPL 2019, MI vs KKR - 'Pathetic batting': Twitter slams Robin Uthappa after  meek show | Cricket - Hindustan Times

மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், புனே வாரியர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய ஐபிஎல் அணிகளுடன் இணைந்து எனது முதல் தர வாழ்க்கையில் என்னை பிரதிநிதித்துவப்படுத்திய கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம், சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் மற்றும் கேரள கிரிக்கெட் சங்கம் ஆகிய அணிகளுக்கு நன்றி.

Shivam Dube की पारी ने मचाया कोहराम, RCB के गेंदबाज थर-थर कांपे, चौकों से  ज्यादा बरसाए छक्के - OneClick Hindi அனைத்து அற்புதமான நினைவுகளுக்காக KKR (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) & CSK (சென்னை சூப்பர் கிங்ஸ்) -க்கு ஒரு சிறப்பு குறிப்பு. அவர்களுடன் நான் இருந்த காலத்தில் நான் பெற்ற நினைவுகளுக்காக நான் எப்போதும் அவர்களைப் போற்றுவேன்.” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.