காலச்சக்கரம் எவ்வளவு வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது. அப்படியே டைம் மிஷினை நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுழற்றி பார்த்தால் இந்தியா நெருப்பாற்றில் நீந்திய காட்சிகளை நம்மால் காண முடியும். வரலாற்றின் ஆறாத வடுக்களான பல கொடுந்துயரங்கள் அப்பொழுது நிகழ்ந்து கொண்டிருந்ததை காண நேர்ந்தால் பாரதியார் சொல்வது போல் நாம் விம்மி விம்மி அழ நேரிடும். வரலாற்றில் எத்தனையோ பேர் வெளியில் இருந்து இந்தியாவை ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இந்தியாவின் தன்மைக்கு ஏற்றவாறு மாறி இந்தியர்களாவே மாறிப்போனார்கள். ஆனால், பிரிட்டன் மட்டுமே இறுதிவரை காலனிய ஆதிக்க உச்சபட்ச கொடுமைகளை நமக்கு அளித்தது. அப்படியான பிரிட்டன் மண்ணில் மிக நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்ற பெருமை உடைய ராணி இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்தியிருக்கிறார்.

உலகம் முழுவதும் தலைவர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடி முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனாலும், ராணி எலிசபெத்தின் மறைவையொட்டி பிரிட்டனின் காலனிய ஆட்சியால் இந்திய மண் அடைந்த துயரங்களை பலரும் பட்டியலிட்டு கொண்டிருக்கிறார்கள். ஒருவர் இறப்பு எய்தியுள்ள நிலையில், இப்படி அவரது நாட்டை பற்றி சொல்லலாமா? அவர்கள் ஆண்டு இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் அதனை ஏன் நினைவுகூற வேண்டும் என்றும் சிலர் கேட்கலாம். ஆனால், வரலாறு என்பது சில நேரங்களில் நம்மை அறியாமலே கடந்த கால நினைவுகளை நமக்கு நினைவூட்டி செல்கிறது. 

ராணி எலிசபெத்-2 மறைவும், இந்திய அரசின் அறிவிப்பும்

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், தனது 96-வது வயதில் உடல் நலக்குறைவால்  ஸ்காட்லாந்து நகரில்  பால்மோல் கோட்டையில்  ஓய்வெடுத்து வந்தார்.  வயது மூப்பால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள் ராணிக்கு அதிகரிக்கவே, சில காலமாக அவரது கவலைக்கிடமாக இருந்ததையடுத்து நேற்று காலமானார்.

பிரிட்டன் ராணி 2ம் எலிசபெத்தின் மறைவையொட்டி, இந்தியா முழுவதும் செப்டம்பர் 11ம் தேதி ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கும் எனவும் இதன் தொடர்ச்சியாக மூவர்ணக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும் எனவும் அன்று ஒரு நாள் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் எனவும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மரியாதை நிமிர்த்தமாக உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பைக் குறித்து கண்டனங்களும், கேலிகளும் எழுந்தவண்ணம் இருக்கிறது.

image

இப்போது இந்தியாவும் பிரிட்டனும்..

பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்று 75 ஆண்டுகளைக் கடந்திருக்கிறோம். இதற்கிடையில் பல முறை 2ம் எலிசபெத் விருந்தினராகவும் இந்தியா வந்துள்ளார். இன்று காமன்வெல்த் நாடுகளில் பிரிட்டனும் இந்தியாவும் சேர்ந்து இருக்கிறது. தற்போது மறைந்து இருக்கும் 2ம் எலிசபெத் தான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவர். மன்னர் ஆட்சி முறையை இந்தியா ஜனநாயக நாடான பின்பு ஏற்றுக்கொள்ளாது. ஆனால் பிரிட்டன் மக்களுக்கு அப்படி இல்லை, இன்றளவும் பிரிட்டன் அரச குடும்பத்தின் மீது அன்பும், மரியாதையும் இருக்கிறது.

இந்நிலையில், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளில் நடத்தப்பட்ட இன்னல்களைக் கொடுமைகளையும் பற்றியும் தற்போது நினைவூட்டப்பட்டு வருகிறது. இந்தியாவின் மீது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய செய்த காலனி ஆதிக்கத்தில் நடந்த கொடுமைகளை யாராலும் மறக்க முடியாது. அதில் ஒரு கொடூர சம்பவம் தான் ஜாலியன்வாலா பாக் படுகொலை.

1919-ல் நடந்த இந்த சம்பவத்தைக் குறித்து இந்தியா வந்த போது, வருத்தம் தெரிவித்திருந்தார் 2ம் எலிசபெத். மேலும் எலிசபெத், இந்திய ஜனாதிபதிகளான டாக்டர் ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன் மற்றும் பிரதீபா பாட்டீல் ஆகியோருக்கு விருது அளித்து கௌரவித்துள்ளார்.

image

எலிசபெத்துக்குத் தொடரும் எதிர்ப்புகள்..

இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த பிரிட்டிஷ், கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை ஆளத் தொடங்கி, நாட்டிலிருந்த வளங்களைச் சுரண்டி பிரிட்டன் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொண்டு, நாட்டு மக்களைக் கொத்தடிமையாக நடத்தி, வன்முறையையும் ரத்தவெறியாட்டமும் செய்த  வரலாற்றை மறக்க முடியுமா? அவர்களிடமிருந்து போராடி விடுதலை வாங்கி கொடுத்த விடுதலை போராட்ட தியாகிகளுக்கு இது தான் மரியாதையா? “ என்று சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.

image

மேலும் இந்தியாவை போல காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து நிறவெறுப்பை அதிகம் எதிர்கொண்ட ஆப்பிரிக்கச் சமூகத்தை சேர்த்த சமூக   ஆர்வலர்கள் பலர் இனப்படுகொலையின் இளவரசி மறைந்துவிட்டார் என்று கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான   உஜு அன்யா ட்வீட் செய்து பின் கண்டனங்கள் எழுந்தவுடன் அந்த பதிவை நீக்கியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.