பிரிட்டன் ராணி எலிசபெத் மறைந்த நிலையில் கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை அடுத்து அணியப்போவது யார் என்ற கேள்விக்கான விடையை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

ராணி எலிசபெத் என்றாலே இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படும் கோஹினூர் வைரமும் நினைவுக்கு வரும். இங்கிலாந்து ராணிஅணியும் பிளாட்டின கிரீடத்தின் மையப்பகுதியில் பதிக்கப்பட்டிருக்கும் கோஹினூர் வைரம் 105.6 காரட் எடையுடையது. உலகின் உயரிய வகை வைரமான இதன் மதிப்பு அளவிட முடியாதது. 14 நூற்றாண்டைச் சேர்ந்த கோஹினூர் வைரம் ஆந்திராவின் குண்டூர் பகுதியில் காக்கத்திய அரச வம்சத்தின் ஆட்சிக்காலத்தில் கண்டறியப்பட்டது.

The True Story of the Koh-i-Noor Diamond—and Why the British Won't Give It  Back | History| Smithsonian Magazine

வாரங்கலில் உள்ள கோயிலில் வைக்கப்பட்ட இந்த வைரத்தை அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் கபூர் கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது. மொகலாய மன்னர்கள் பலரிடம் சென்ற கோஹினூர் வைரம் பஞ்சாப்பை ஆண்ட மன்னர் ரஞ்சித் சிங் மூலம் அவரது மகன் திலீப் சிங் கைக்கு சென்றது. பஞ்சாப் இணைப்பிற்குப் பின் 1849ஆம் ஆண்டு ராணி விக்டோரியாவுக்கு கோஹினூர் வைரம் வழங்கப்பட்டது.

Britain's Crown Jewels include a 'super deep' diamond that formed close to  Earth's core - Mirror Online

70 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிபுரிந்த 2ஆம் எலிசபெத், பல்வேறு தருணங்களில் கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை அணிந்து வந்துள்ளார். தற்போது அவர் காலமாகிவிட்டதால் ஆட்சிப்பொறுப்பு மகன் சார்லஸிடம் வந்துள்ளது. இதனால் கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை யார் அணிவார்கள் என்ற கேள்வி எழுந்தது. மன்னராக சார்லஸ் பொறுப்பேற்றுள்ளதால் அவரது மனைவி கமீலா பார்க்கர் ராணி என்ற அந்தஸ்து பெறுகிறார். எனவே, விலைமதிப்பற்ற கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை கமீலாவே அணிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Prince Charles and Camilla's Relationship - Timeline of Prince Charles and  Camilla Parker Bowles' Romance

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.