வரலாறு காணாத வகையில் மழை கொட்டித் தீர்த்ததால் இந்தியாவின் ஐ.டி. ஹப்பாக இருக்கும் பெங்களூரு வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. இது தொடர்பான பல வீடியோக்களும், ஃபோட்டோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மக்கள் பலரும் மழை வெள்ளத்தில் தத்தளித்து செல்வதும், அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு தள்ளாடியும் வருகிறார்கள். அதேபோல கார்கள், பைக்குகள் உட்பட பல வாகனங்களும் வெள்ள நீரில் மிதந்துக் கொண்டிருப்பதையும் வீடியோக்கள் மூலம் காண முடிகிறது. இதனால் டிராக்டர், ஜே.சி.பி மற்றும் படகுகள் வாயிலாக வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.


பொதுவாகவே வெள்ளத்தில் செல்ல படகுகளே பயன்படுத்தப்படுவது வழக்கம். இப்படி இருக்கையில் ட்விட்டர் வாசிகள் பலரும் பிரபல டாக்சி சேவை வழங்கும் உபர் நிறுவனம் படகு சேவையும் வழங்குவதாக குறிப்பிட்டிருந்த ஸ்க்ரீன்ஷாட்களை ஷேர் செய்திருக்கிறார்கள்.

உபர் நிறுவனம் பிரிட்டனில் சில இடங்களில் படகு சேவையை வழங்கி வந்தாலும் இந்தியாவில் அதை அறிமுகப்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாக இருக்கும் என்றும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. இருப்பினும் உபர் நிறுவன தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இந்த படகு சேவை குறித்து வெளியிடப்படவில்லை.


ஒருவேளை இது போலியான பதிவாகவோ அல்லது வாட்ஸ் அப் ஃபார்வேர்டாகவோ இருக்கும் என பலரும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் ”உபரின் போட் சேவை குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் போலியானதாக இருக்கக் கூடும்” என பெங்களூருவின் ஹென்னூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் The Free Press Journal செய்தி தளத்திடம் பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசியுள்ள பவானி என்ற அந்த பெண், உபர் செயலில் போட் சேவை குறித்து பார்த்த போது அதில் அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், வைரலாகியிருக்கும் அந்த போட்டோக்கள் கண்டிப்பாக மார்ஃபிங் செய்யப்பட்டதாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.