மனைவியை எப்போதைக்குமான கவலையாக இளைஞர்கள் பார்ப்பதாக கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் சாடியுள்ளனர். 

இப்போதெல்லாம், இளைய தலைமுறையினர் திருமணத்தைத் தவிர்க்கக்கூடிய ஒரு தீமை என்று நினைக்கிறார்கள். எந்தவிதமான பொறுப்புகளும், கடமைகளும் இல்லாமல் சுதந்திரமான வாழ்க்கையை அனுபவிக்க திருமணத்தை வெறுக்கிறார்கள் என இளைஞர் விவாகரத்து கோரிய ஒரு வழக்கு ஒன்றில் கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

image

திருமணத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இளைஞர் ஒருவர் விவாகரத்து கோரிய வழக்கு நீதிபதிகள் ஏ முகமது முஸ்டாக் மற்றும் சோபி தாமஸ் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கை நிராகரித்து முடித்து வைத்தனர். வழக்கின் தீர்ப்பில் உத்தரவில் பேசியிருக்கும் நீதிபதிகள், இந்த தலைமுறை இளைஞர்கள் திருமணத்தை ஒரு தீமையை போல் பார்க்கின்றனர். பொறுப்புகளும், கடமைகளும் இருப்பதை அவர்கள் விரும்புவதில்லை. எந்த பொறுப்புமில்லாத சுதந்திர வாழ்க்கையை வாழவே விரும்புகின்றனர். மேலும் மனைவி (WIFE) என்ற சொல்லுக்கு ”எப்போதைக்குமான கவலையை வரவழைத்துக்கொள்ளுதல்” (WIFE – WORRY INVITED FOR EVER) என்ற புது அர்த்தத்துடன் மனைவியை இளைஞர்கள் பார்ப்பதாக சாடியுள்ளனர்.

image

மேலும் நுகர்வோர்களாக இளைஞர்கள் மாறிவிட்டனர் என்று கூறிய நீதிபதிகள், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கலாச்சாரமான லிவ்-இன்-ரிலேசன்ஷிப் உறவுமுறை பெருகி வருவது சமூகத்தில் கவலை அளிப்பதாக தெரிவித்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.