உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்துவரும் இந்த வேளையில், ரஷியாவுடன் இணைந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் ராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஏறத்தாழ 6 மாதங்கள் ஆகிவிட்டன. போர் இன்னமும் நடந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில் ரஷ்யா சாா்பில் ‘வோஸ்டோக்-2022’ என்ற பெயரில் ராணுவப் பயிற்சி நடத்தப்படவிருக்கிறது. இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான ராணுவ வீரா்கள் பங்கேற்கின்றனா். 140 போா் விமானங்கள், 60 போா்க் கப்பல்கள், 5,000 இராணுவ உபகரணங்கள் இந்த பிரமாண்டமான பயிற்சியில் ஈடுபடுத்தப்படுகின்றன. இப்பயிற்சி ரஷ்யாவின் தூர கிழக்கு, ஜப்பான் கடற்பகுதியில் செப்டம்பா் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

image

இப்பயிற்சிக்கு இந்தியா சார்பில் 75 பேர் கொண்ட ஒரு ராணுவக் குழு அனுப்பப்படவிருக்கிறது. இக்குழுவில் கூர்க்கா படைப் பிரிவு, கடற்படை, விமானப் படையை சேர்ந்த பிரதிநிதிகள் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துவரும் இந்த வேளையில்,  ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. ‘வோஸ்டோக்-2022’ ராணுவப் பயிற்சியில் பல முன்னாள் சோவியத் நாடுகள், சீனா, இந்தியா, லாவோஸ், மங்கோலியா, நிகரகுவா மற்றும் சிரியாவின் துருப்புக்கள் பங்கேற்கவுள்ளன.

image

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து இவ்விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வந்தது. எனினும் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் அவையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் முதல் முறையாக ரஷியாவுக்கு எதிராக வாக்களித்தது இந்தியா. அதற்கு முன்னதாக ரஷ்யாவிடம் இருந்து சுமார் 30 போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது இந்தியா.

இதையும் படிக்க: ஸ்பெயின்: உயிருக்கு உலை வைத்த ஆலங்கட்டி மழை! தலையை பதம்பார்த்த ஆலங்கட்டியால் குழந்தை பலி!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.