புனித நதியாகக் கருதப்படும் கங்கை நாளுக்கு நாள் மாசுபட்டுக்கொண்டிருக்கிறது. இதில் நீராடுவதற்காக தினமும் நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அதே சமயம் கங்கை ஆற்றில் இறந்தவர்களை தூக்கிப்போடும் சம்பவங்களும் நடக்கின்றன. உத்தரப்பிரதேசத்தின் பிரயக்ராஜ் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் சிலர் படகில் பயணம் செய்துகொண்டே சிக்கன் சமைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. சிக்கன் சமைப்பவர்கள் ஹூக்கா எனப்படும் பைப் மூலம் புகைப்பிடித்துக்கொண்டிருந்தனர். பிரயக்ராஜ் அருகில் உள்ள தாராகஞ்ச் என்ற இடத்தில் இருக்கும் நாகவாசுகி கோயில் அருகில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருந்தது. புனித நதியாகக் கருதப்படும் கங்கையில் கோழிக்கறியை சமைத்தது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து, அந்த வீடியோவில் இருக்கும் நபர்களை கைதுசெய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வீடியோ

இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை ஒன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரி சைலேஷ் குமார் இது குறித்து கூறுகையில், “கங்கை ஆற்றில் படகில் கோழிக்கறி சமைத்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். கடந்த வாரத்தில் கங்கை மற்றும் யமுனை ஆற்றில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து மீட்புப் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கனமழை காரணமாக ராஜாபூர், தாராகஞ்ச் உட்பட பல நகரங்கள் மழை நீரால் சூழ்ந்தன. மழை நீரில் படகு சவாரி செய்ய நிர்வாகம் தடை விதித்திருக்கிறது. கங்கை ஆறு பயணிக்கும் இடங்கள் அனைத்திலும் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் மற்றும் கங்கை ஆற்றும் தினமும் ஆயிரக்கணக்கான முனிவர்களும் வந்து செல்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.