ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய  6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் அணியுடன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) லீக் சுற்றில் மோதுகிறது.

image

எப்போதுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழும். அந்த வகையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி கிட்டத்தட்ட உலகக் கோப்பை போட்டிக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் போது இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அதிர்ச்சி அளித்திருந்தது. இதனால் இந்த ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி.  

இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் சந்தித்த காயத்தால் இந்த ஆசிய கோப்பையிலிருந்து விலகியுள்ளார். அதேபோல் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷாஹீன் அப்ரிடி காயம் காரணமாக விலகினார்.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, அர்ஷ்தீப் சிங், ஆர்.அஷ்வின், ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ரவி பிஷ்னோய், சூரியகுமார் யாதவ்.

ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிஃப் அலி, ஃபகர் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதிர்.

image

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், , யுஸ்வேந்திர சாஹல்

பாகிஸ்தான்: பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, ஹைதர் அலி, குஷ்தில் ஷா, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப், ஷாநவாஸ் தஹானி.

துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இதையும் படிக்க: யார் பலசாலி? ஆசியக் கோப்பையில் இன்று மோதும் இலங்கை – ஆப்கானிஸ்தான்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.