இரவு பகல் பாராது முன்கள பணியாளர்களை போல உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். டிராஃபிக், மழை போன்ற நேரங்களில் குறித்த நேரத்தில் ஆர்டர் டெலிவரி செய்வதில் சற்று தாமதம் ஏற்படுவதுண்டு.

ஆனால் இதனை வீட்டில் இருந்து ஆர்டர் செய்பவர்கள் அறிந்திருக்காமல் டெலிவரி ஊழியர்களை வசைபாடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த மாதிரியான சம்பவங்கள் குறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அந்த வகையில், Zomato டெலிவரி ஊழியர்களை நடு ரோட்டில் வைத்து பெண் ஒருவர் செருப்பால் அடித்து தாக்கும் வீடியோ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது.

அதன்படி, @bogas04 என்ற ட்விட்டர் பயனரின் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளதாவது:-


“என்னுடைய உணவு டெலிவரி செய்வதற்காக வந்துக் கொண்டிருந்த ஊழியரை நடு ரோட்டில் வைத்து பெண் ஒருவர் செருப்பால் அடித்தும், அவரிடம் இருந்த உணவை பறித்ததோடு வசைபாடியிருக்கிறார்.

இதனையடுத்து அழுதபடி என்னுடைய ஆர்டரை டெலிவரி செய்ய வந்த போது தன்னுடைய வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சத்துடன் இருப்பதாகவும் கூறினார். இதனிடையே நடந்த சம்பவத்தை அங்கே இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளது தெரிய வந்திருக்கிறது.

இதனை ஆதாரமாகக் கொண்டு டெலிவரி ஊழியருக்காக Zomato கஸ்டமர் கேரிடம் பேசினேன். ஆனால் டெலிவரி ரைடருக்கான சப்போர்ட்டை அணுகுமாறு தெரிவித்துவிட்டார்கள். அவர்களிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காததால் ட்விட்டரில் பதிவிடுகிறேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் அந்த டெலிவரி ஊழியருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என ஆதரவு குரலை எழுப்பியிருக்கிறார்கள். ட்விட்டர் பயனரின் பதிவு வைரலானதை தொடர்ந்து ஸொமேட்டோ நிறுவனம் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.