ட்விட்டரில் அரசுக்கு எதிரான அதிருப்தியாளர்களை பின்தொடர்ந்து ரீட்வீட் செய்த சவுதியைச் சேர்ந்த பிஹெச்.டி மாணவிக்கு 34 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி பட்டம் பெற்ற 34 வயதான மாணவி சல்மா அல்-ஷெஹாப் 2018-19 காலகட்டத்தில் விடுமுறைக்காக தனது சொந்த நாடான சவுதி அரேபியாவிற்கு திரும்பியிருந்தார். அப்போது சவுதி அரசுக்கு எதிரான அதிருப்தியாளர்களை ட்விட்டரில் பின்தொடர்ந்து (Follow) அவர்களது பதிவுகளை ரீட்விட் செய்திருந்தார் சல்மா. தனது கணவர் மற்றும் குழந்தைகளை தன்னுடன் மீண்டும் இங்கிலாந்துக்கு அழைத்து வர திட்டமிட்டிருந்தபோது, சவுதி அதிகாரிகள் சல்மாவை கைது செய்தனர்.

Saudi Arabia sentences woman to 34 years for Twitter activism | The Times  of Israel

இதையடுத்து “குற்றம்” எனக் குறிப்பிடப்பட்ட சமூக ஊடக தளத்தைப் பயன்படுத்தியதற்காக சல்மா அல்-ஷெஹாப்பிற்கு சிறப்பு பயங்கரவாத நீதிமன்றம் ஆரம்பத்தில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. சல்மாவின் நடவடிக்கைகள் பொது அமைதியின்மை மற்றும் சிவில் மற்றும் தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையில் இருந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

Saudi doctoral student gets 34 years in prison for tweets | National News |  joplinglobe.com

இதையடுத்து அரசு வழக்கறிஞர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை சல்மாவின் மற்ற குற்றங்களை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து அதிருப்தியாளர்களை பின் தொடர்ந்து ரீட்வீட் செய்த குற்றத்திற்காக நீதிமன்றம் சல்மாவிற்கு 34 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2 குழந்தைகளுக்கு தாயான சல்மா இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தை அணுகுவார் என்றும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அவர் தொடர்ந்து போராடுவார் என்றும் சல்மாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Saudi woman sentenced to 34 years for Twitter posts backing women's rights  activist - TechMagLive

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.