சிறு குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதாக, மருத்துவ ஆய்வு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்து வெளியாகும், ‘லான்செட்’ என்ற மருத்துவ ஆய்வு இதழில், இது தொடர்பான கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கேரளாவில் இதுவரை 82 குழந்தைகளும், ஒடிசாவில் 26 குழந்தைகளும் இதன் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அறிகுறிகளாக கடும் காய்ச்சல் மற்றும் உடலில் சிவப்பு நிறக் கொப்புளங்கள் உருவாகுதல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

Tomato Fever: Symptoms, preventive measures, TN is safe | தக்காளி காய்ச்சல்-  அறிகுறிகள், சிகிச்சை முறை என்ன? தமிழகத்தில் அச்சம் வேண்டாம் | Tamil Nadu  News in Tamil

இந்த நோய் , 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடமும் இதன் பாதிப்பு உள்ளதாக நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. இந்தக் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியது என்பதால், எச்சரிக்கையுடன் இருக்கவும், நோய் அறிகுறி ஏற்பட்ட உடனேயே சிகிச்சை பெற்றுகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.