தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜே பப்பு. `குக்கு வித் கோமாளி’ மூலம் மக்களிடையே பரிச்சயமானவர். தனுஷூடன் சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

நான்கு வருஷத்துக்கு முன்னாடி தனுஷ் சாரைப் பார்த்தேன். அப்ப பேசும்போது அவர் கண்டிப்பா சேர்ந்து படம் பண்ணுவோம்னு சொன்னார். திடீர்னு ஒருநாள் ஃபோன் வந்து சார் படத்தில் நீங்க இருக்கீங்கன்னு சொன்ன தருணம் ரொம்ப மேஜிக் மொமண்ட் ஆகத்தான் இருந்தது.

விஜே பப்பு

முதல் ஃபோன் காலில் என்ன கேரக்டர்னு எதுவுமே கேட்கல. அதுக்கு பிறகு தான் நித்யா மேனனுடைய தம்பியாக நடிக்கிறேன்னு தெரிஞ்சது. பூஜைக்கு பிறகு தனுஷ் சாரும், டைரக்டரும் முக்கியமான சீன் இருக்கு… என்ன பண்ணப் போறானோன்னு சொல்லிட்டே இருந்தாங்க… என்னவாக இருக்கும்னு ஓடிட்டே இருந்துச்சு.

ஷூட் ஆரம்பிச்சு மூணு நாளைக்கு பிறகு என்கிட்ட சீன் பேப்பர் கொடுத்தாங்க… அதை படிச்சுப் பார்க்கும்போதே பக்குன்னு இருந்துச்சு… அதை கொடுக்கும்போதே ஒரு ரூல் போட்டாங்க.. அது என்னன்னா, பிரகாஷ் ராஜ் சார், பாரதிராஜா சார், தனுஷ் சார் எல்லாரும் பிரேம்ல இருப்பாங்க. அவங்க மூணு பேரும் பேச மாட்டாங்க. நீங்க மட்டும் தான் பேசுவீங்க. அதுவும் ஒரே டேக்ல பண்ணனும்னு சொல்லிட்டார். அந்த பேப்பரை மனப்பாடம் பண்ணினதில் இருந்து சாப்பிடவும் இல்ல, தூங்கவும் இல்ல. பயத்தோட அந்த சீனை நடிச்சு முடிச்சேன்.

விஜே பப்பு

மூணு பேரும் லெஜண்ட். அவங்க முன்னாடி சரியா பேசணும் என்கிற பொறுப்பிலேயே சரியா பண்ணினேன். அதை முடிச்ச பிறகு தான் மனசு நிம்மதியாச்சு. எனக்கு தனுஷ் சாரை ரொம்பப் பிடிக்கும். அவர் கூட இருக்கிறது ஒரு ஸ்கூலில் இருந்து கத்துக்கிற மாதிரி. இந்த சீனை இப்படி நடின்னு சொல்லிக் கொடுப்பார். என்னுடைய முழு கவனமும் அவர் மீது மட்டும்தான்! தனுஷ் சார் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பார்த்து என்னை சந்திச்சுப் பாராட்டினார். நான்கு வருஷத்துக்கு முன்னாடி என்னை சந்திக்கும்போது என் படத்தில் நடிப்பீங்கன்னு சொன்ன வார்த்தையை ஞாபகம் வச்சு இப்ப எனக்கு இப்படியொரு வாய்ப்பை கொடுத்திருக்கார் என்பதே என்னை பொறுத்தவரைக்கும் மிகப்பெரிய விஷயம்.

கிளைமாக்ஸ் சீன் எல்லாம் தியேட்டரில் பார்க்கும்போது அழுதுட்டேன். சில விஷயம் கனவில் நினைப்போம். கனவிலும் நினைக்காத மிகப்பெரிய வாய்ப்பு விஜய் டிவி. அடுத்து என் வாழ்க்கையில் நடந்த மேஜிக் தான் இந்தப் படம். இதுக்கு பிறகு நான் படம் பண்ணுவேனா, வாய்ப்பு கிடைக்குமான்னுலாம் எனக்கு தெரியாது. ஆனா, இந்தப் படத்தை என் பையனுக்கு போட்டுக் காட்டிடுவேன். உன் அப்பா ஒரு நடிகன்டா. தனுஷ் சாருடன் சேர்ந்து நடிச்சிருக்கேன்னு பெருமையா சொல்லிப்பேன்! என்றவரிடம் நித்யா மேனனுக்கு அக்காவாக நடித்த அனுபவம் குறித்துக் கேட்டோம்.

விஜே பப்பு

எனக்கு உடன்பிறந்த தம்பின்னு யாரும் இல்ல. ஆனா, நீங்க என் தம்பி மாதிரியே இருக்கீங்கன்னு சொன்னாங்க. அந்த அளவுக்கு பர்சனலா கனெக்ட் ஆகிட்டோம். `ஓ காதல் கண்மணி’ படம் பார்த்துட்டு நித்யா மேனன் ட்ரீம் கேர்ள் ஆக இருந்தாங்க.. இந்தப் படத்துக்கு பிறகு அக்காவாக மாறிட்டாங்க. அவங்ககிட்டவே ட்ரீம் கேர்ளாக உங்களை பார்க்க நினைச்சேன். இப்ப அக்காவாக பார்க்க ஆரம்பிச்சிட்டேன்னு சொன்னேன். அவங்களும் ட்ரீம் கேர்ள் எல்லாம் வேண்டாம்.. அக்கான்னே கூப்பிடுங்கன்னு சொல்லிட்டாங்க..!” என்றார்.

இன்னும் படம் தொடர்பாக பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.