ரேஸிங் கார்களுக்கென பிரத்யேகமாக நடத்தப்படும் போட்டிதான் ஃபார்முலா ஒன் ரேஸிங் பந்தயம். அதில் மின்சார வாகனங்களுக்காக மட்டுமே நடத்தப்படுவது ஃபார்முலா இ ரேஸிங் போட்டி.

கடந்த 7 வருடங்களாக நடைபெற்று வரும் இப்போட்டியின் 8-வது சீசன் (2021-22) ஆண்டு தொடங்கியது. அதில் பல ரேஸர்கள், பல்வேறு ரேஸிங் கார் நிறுவனங்களுடன் கலந்து கொண்டனர். இந்த சீசனின் இறுதி போட்டி கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது. ஆரம்பத்தில் நடைபெற்ற சுற்றுகளில் மிட்ச் இவான்ஸ் நான்கு முறை முதல் இடத்தில் வந்திருந்தார். அதே சமயம் வண்டூரனே 8 முறை போடியம் ஏறியுள்ளார். அதனால் இந்தப் போட்டி இவ்விருவருக்கும் இடையே கடுமையான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Stoffel VANDOORNE

ஆரம்பத்தில் தடுமாறி பெனால்டி வாங்கிய வண்டூரனே, பின்னர் போட்டியில் தன்னை தக்கவைத்துக் கொண்டு தொடர்ந்து முன்னேறி இரண்டாவது இடத்தைப் பிடித்து, டைட்டில் அவார்டையும் தட்டிச் சென்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிட்ச் இவான்ஸ் ஆறாவதாகவே ரேஸிங் கோட்டிற்கு வந்து சேர்ந்தார். ரேஸிங் ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து முதல் இடத்தை தன் கட்டுக்குள்ளேயே வைத்திருந்த வென்டூரி ரேஸிங் இன் எடார்டோ மோர்ட்டாரா முதல் இடத்தில் வந்து சேர்ந்தார்.

Formula E Race

ஜாகுவார் சார்பாக போட்டியிட்ட மிட்ச் இவான்ஸ் நான்கு சுற்றுகளில் வெற்றி பெற்றாலும், அதிக முறை போடியம் ஏறியதால் வண்டூரனேவிற்கு மிட்ச் இவான்ஸை விட புள்ளிகள் அதிகமாக இருந்தது. இறுதிப் போட்டியிலும் வண்டூரனே இரண்டாவதாக வந்ததால் 213 புள்ளிகள் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு அடுத்ததாக மிட்ச் இவான்ஸ் 180 புள்ளிகளும், மோர்டாரா 169 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.

தென்கொரியாவில் சியோலில் முதல் முறையாக நடைபெற்ற இப்போட்டியில் இதுவரை நடந்த ஃபார்முலா இ சீசன்களைக் காட்டிலும் இது மிகப்பெரிய சீசனாகப் பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் மொத்தம் 10 நாடுகளில் 16 போட்டிகள் நடைபெற்றது. அடுத்த சீசனில் 13 நாடுகளில் 18 போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளது ஏபிபி. அதில் இந்தியாவில் ஹைதராபாதையும் தேர்வு செய்துள்ளது ஏபிபி கமிட்டி. அதேபோல இதுவரை நடந்த சீசன்களில் இரண்டாம் ஜெனரேஷன் வகை கார்கள் (Gen 2) தொழில்நுட்ப கார்களே பயன்படுத்தப்பட்டன. இனி வரும் சீசனில் அதை விட உயர்தர தொழில்நுட்ப வசதி கொண்ட ஜென் 3 வகை கார்கள் பயன்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது ஃபார்முலா இ. அது மட்டுமில்லாமல் அடுத்த சீசனில் மெர்சிடிஸ் மெக்லாரன் ரேஸிங் என்று மாற்றம் செய்யப்படுவதாகவும் , பல வருடங்கள் கழித்து மீண்டும் மெசெரட்டியும் ரேஸிங் ஃபார்முலா போட்டியில் கலந்துக் கொள்ளவதாகவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Formula E Season 8 2021-2022 Winners

இந்த வெற்றி குறித்து பேசிய வண்டூரனே, “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. போட்டி ஆரம்பத்திலிருந்தே மிட்ச் இவான்ஸ் எனக்கு மிகவும் சவாலாக இருந்தார். ஆனால் நான் தொடர்ந்து கன்சிஸ்டென்டாக இருந்து புள்ளிகளை தக்கவைத்துக் கொண்டதால், கோப்பையைத் தக்கவைக்க முடிந்தது. இந்த வெற்றி என் அணியில் உள்ள ஒவ்வொவரும் பெற்ற வெற்றி. இதற்கு என் அணியினருக்கு நன்றி சொல்ல நான் கடமைபட்டுள்ளேன்” என்று கூறினார்.

இறுதிப் போட்டியில் முதலாவதாக வந்த எடார்டோ மோர்டாரா கூறுகையில், “கடந்த இரு வாரங்களாக புள்ளிகள் குறைந்துவிட்டபடியால் நான் மிகுந்த மனஅழுத்ததிற்கு ஆளானேன். அதிலிருந்து வெளியேற உதவிய என் அணியினற்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். இன்று போட்டி ஆரம்பித்ததிலிருந்தே உற்சாகமாக என்னை வைத்துக்கொண்டேன். சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், இறுதிப் போட்டியில் முதலாவதாக வந்தது ஆறுதல் அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற வண்டூரனேவிற்கு இதுவே முதல் டைட்டில் வெற்றி ஆகும். அதே போல மெர்சிடிஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.