தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் தேர்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்தவகையில் குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. அவற்றுக்கான தற்காலிக விடைத்தாள்களும் வெளியிடப்பட்டன. இத்தேர்வுகளை தொடர்ந்து, குரூப் 1 தேர்வும் விரைவில் நடைபெற உள்ளது.

கடந்த ஜூலை மாதம், இதற்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கானதுதான் குரூப் 1 தேர்வு. இதற்கு வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30ந் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு சென்னையில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான நேரடி கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை (18-ம் தேதி) முதல் தொடங்குகின்றது.

image

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் முகவரிக்கு நேரடியாக செல்லலாம்.

மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம்,

ஏ-28, முதல் தளம், டான்சி கட்டிடம்,

திரு.வி.க. தொழிற்பேட்டை,

கிண்டி,

சென்னை-32

சந்தேகங்களுக்கு 9361566648, 8072584856 ஆகிய தொலைபேசி எண்கள் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.

image

இப்போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்துகொண்டு பயனடையுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.