`எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்வுசெய்த பொதுக்குழு செல்லாது’ எனக்கோரிய ஓபிஎஸ் மனு மீதான வழக்கின் விசாரணையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில், ஜூன் 23க்கு முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். இதற்கு ஓபிஎஸ் தற்போது அறிக்கை வெளியாகியிட்டுள்ளார். அதில் “அதிமுக-வின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “தர்மத்தை நம்பினேன்; மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன்; அதிமுக-வை உயிராக நேசிப்போரையும் தொண்டர்களையும் நம்பினேன்; உண்மையும், தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமார நம்பிய தமிழ்நாட்டு மக்களை நம்பினேன்; இவையாவிற்கும் மேலாக, தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்து, பாதுகாத்து, தங்களது ஆயுளையே அர்ப்பணித்த இயக்கத்தின் காவல் தெய்வங்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரது ஆசிகளை நம்பினேன். இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாகி இருக்கிறது.

image

அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொதுமக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது. அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி, அதிமுக-வின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு, அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திகழும், வெற்றி நடைபோடும் என்பது திண்ணம்.

image

`தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே’ என்னும் எம்.ஜி.ஆர். அவர்களின் திருமந்திரத்தை இதயப்பூர்வமாக ஏற்று, அதிமுக-வின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்றைக்கும் ஜெயலலிதா தான் என்னும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வேன். அதிமுக-வின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.