சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் தைவான் நாட்டிற்கு வந்து சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானை நோக்கி ஏவுகணை வீசிய சீனா.

சீனாவில் இருந்து பிரிந்து தனியாக சென்ற தைவானை மீண்டும் சீனாவுடன் இணைக்கும் முயற்சியில் சீனா மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டின் பிரதிநிதிகளை சந்தித்துவிட்டு திரும்பினார். 

அமெரிக்காவின் சபாநாயகர் தைவானுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருப்பது சீனாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை எதிர்க்கும் விதமாக தைவானின் கடலோர பகுதிகளை சுற்றிவளைக்கும் விதத்தில் ஏவுகணை வீசி தீவிர போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது சீனா.

அமெரிக்கா மற்றும் தைவானுக்கு எச்சரிக்கைவிடுக்கும் வகையில் இந்த போர்ப்பயிற்சியை தீவிரப்படுத்தி இருக்கிறது சீனா.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.