இருசக்கர வாகன பிரியர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம், மிகப்பெரிய வரமாக இருக்கப்போகிறது. காரணம், இம்மாதம் டிவிஎஸ் முதல் ராயல் என்ஃபீல்டு வரை நிறைய புதிய ரக பைக்குகள், இந்திய சந்தைக்கு வர உள்ளன. கூடவே சில பைக்களின் அப்டேட்களும் வர உள்ளன. அப்படியான சில முக்கியமான வாகனங்களின் பட்டியல், இங்கே ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக!

Royal Enfield Hunter 350 (ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350):

எதிர்பார்க்கப்படும் விலை: 1.7 லட்சம் (Ex-Showroom)

ராயல் என்ஃபீல்டின் ஹண்டர் ரக வண்டிகள், இதுவரை வந்த ராயல் என்ஃபீல்ட் பைக்குகளில் மிகக்குறைவான விலையில் விற்பனைக்கு வர உள்ளன. அதேபோல இதுவரை வந்த பைக்குகளில் மிக குறைந்த எடையுடன், கூடுதல் கம்ஃபர்டபுளாக இருக்குமென சொல்லப்பட்டுள்ளது. இந்த பைக்கில் வேலைபாடுகள் நிறைந்த பெட்ரோல் டேங்க், அகலமான கைப்பிடி, வட்ட வடிவில் கண்ணாடிகள், ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லேம்ப் அலகுகள், ரிப்பட் வடிவிலான பின்பக்க ஒற்றை இருக்கை, வட்டமான ஃபெண்டர்கள் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலவே செமி-டிஜிட்டல் எனப்படும் பாதி டிஜிட்டல் வடிவிலான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் வயரிங் அல்லது அலாய் மூலம் சக்கரங்கள் செய்யப்பட்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஃப்ரண்ட் பக்க டயரில் இருக்கும் டிஸ்க் பிரேக், விபத்துகளிலிருந்து காக்க உதவுமென சொல்லப்படுகிறது.

Bajaj Pulsar N150 (பஜாஜ் பல்சர் என் 150):

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.1.10 லட்சம் (Ex-Showroom)

கடந்த ஜூன் மாதம் பஜாஜ் பல்சர் என் 160 அறிமுகப்பட்டிருந்தது. அதன்பின், இந்த மாதம் பல்சர் என் 150 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பல்சர் என் 150, முந்தைய என் 160 போலவே இருக்குமென்றுதான் சொல்லப்பட்டுள்ளது. ஹெட் லைட் போன்ற உதிரி பாகங்களில் சின்ன சின்ன மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும் என்று தெரிகிறது. மற்றபடி முக்கிய பாகங்கள், என் 160 போன்றே இருக்கக்கூடும்.

image

Hero XPulse 200T 4V

எதிர்பார்க்கப்படும் விலை: 1.30 லட்சம் (Ex-Showroom)

Hero XPulse 200 ரக பைக்குகள், பலராலும் கொண்டாடப்பட்ட ஒன்றாகும். அதற்குப் பின் வெளியான Hero XPulse 200 T அந்தளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையை Hero XPulse 200 T 4V மாற்றும் என இதன் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ரெட்ரோ லுக்கில், 4 வால்வ் என்ஜினில் அட்வென்சர் பைக் போல இது தயாராவதாக தெரிகிறது.

image

இவற்றுடன் ஹோண்டா நிறுவனம் சார்பிலும் ஹண்டர் ரக பைக்குகள் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அவை இந்த மாதம் சந்தைக்கு வரவில்லை என்றாலும்கூட, அதை பற்றிய அடிப்படை விவரங்கள் இம்மாதம் வருமென தெரிகிறது. ஹோண்டாவில் தயாரிக்கப்படும் அந்த பைக் பற்றி தற்போதைக்கு `Formidable’ (வலிமையானது) என்ற எழுத்துடன் ஹோண்டா நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. இந்த பைக் 300 மற்றும் 500 சிசி-யுடன் CB350 ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் என தெரிகிறது. ஆகஸ்ட் 8 முதல் புக் செய்யலாம் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதேபோல TVS நிறுவனம், தனது iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (TVS iQube ST) பற்றிய முக்கிய அறிவிப்புகளை இந்த மாதம் வெளியிடும் என தெரிகிறது. ST ரகத்தில் தயாரிக்கப்படும் இந்த பைக், வேகமாக சார்ஜ் செய்ய உதவும் வகையில், பெரிய பேட்டரி கொண்டு தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது. Zontes – Moto Marini ஆகிய நிறுவனங்களும் இந்தியாவில் தங்கள் வாகனங்களை விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுபற்றிய அறிவிப்புகள் இம்மாதத்தில் வெளியகலாம்.

தகவல் உதவி: ZigWheels

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.