பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் இன்றியமையாத ஒரு உணவு. குழந்தையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் தாய்ப்பாலின் பங்கு அளப்பரியது. ஆனால் பெரும்பாலான தாய்மார்கள் தற்போது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்துவருகின்றனர். தாய்ப்பால் ஊட்டுவதால், குழந்தை இறப்பு விகிதம் பெரும் அளவில் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்திருக்கிறது. முறையாக போதுமான அளவில் தாய்ப்பால் ஊட்டுவதால், ஒரு வருடத்திற்கு 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட 8,20,000 பேர் அபாய கட்டங்களிலிருந்து காப்பாற்றப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

குழந்தை பிறந்த முதல் 3 நாட்களுக்கு சுரக்கும் தாய்ப்பாலை சீம்பால் (colostrum) என அழைப்பர். மனிதர்கள் மட்டுமல்ல; குழந்தைபிறந்த முதல் சில நாட்களுக்கு அனைத்து பாலூட்டிகளுக்கும் சீம்பால் சுரக்கும். இது கிட்டத்தட்ட 2 வாரம் வரை சுரக்கும். தாய்ப்பாலில் இருக்கும் சத்துக்கள் மிகவும் அதிகம். ஆனால் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும் தாய்மார்களுக்கு பால்சுரப்பு குறைவாகவே இருக்கும். எனவே கர்ப்பிணிகள் உடலுக்குத் தேவையான அளவில் தண்ணீர் குடிக்கவேண்டும்.

image

சீம்பாலில் இத்தனை நன்மைகளா?

  • இதில் கொழுப்புச்சத்து குறைவாகவும், மாவுச்சத்தும், புரதச்சத்தும் அதிகமாகவும் இருக்கிறது. இது எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.
  • Mmeconium என சொல்லப்படும் காட்டு மலம் குழந்தை பிறந்த 24-48 மணி நேரத்திற்குள் வெளிப்பட வேண்டும். சீம்பால் மலமிளக்கியாக செயல்பட்டு காட்டு மலத்தை வெளிதள்ளுகிறது.
  • மலத்தை இளக்கும் பண்பு சீம்பாலில் உள்ளதால், உடலிலுள்ள அதிகப்படியான பித்தநீர் [bilirubin] மலத்துடன் வெளியேறி பிறந்த குழந்தைக்கு வரக்கூடிய காமாலையையும் தடுக்கின்றது.
  • சத்துக்கள் வழங்குவது மட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் அளவில்லாமல் குழந்தைக்கு வழங்கி உடலுக்கு ஒவ்வாத நோய்க்கிருமிகளிலிடமிருந்து பாதுகாக்கிறது.
  • அதிலும் குறிப்பாக Immunoglobulin-A வகை நோய் எதிர்ப்பாற்றலே தாய்பாலில் மிக அதிகமாக இருக்கும். குழந்தையின் இரைப்பை மற்றும் குடல் பகுதிகளில் உள்ள சளி, சவ்வுகளில் ஏற்படக்கூடிய தொற்றுக்களை இது தடுக்கின்றது.
  • முதல் 3 நாட்களுக்கு பின் சுரக்கும் தாய்ப்பாலை காட்டிலும், சீம்பாலில் சத்துக்களும், நோயெதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் சத்துக்களும் ஏராளம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.