உலகின் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி முதல் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்கவிழாவில் பிரதமர் மோடி, தமிழக முதலைச்சர், திரைபிரபலங்கள், இசை கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் பங்குபெற்று கலை நிகழ்ச்சிகள் கொண்டாட்டத்துடன் கோலாகலமாக தொடங்கி வைத்தனர்.

உற்சாகத்துடன் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டி மூன்று நாட்களை கடந்து நான்காவது நாளாக இன்று மதியம் மூன்று மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதனை தொடர்ந்து இன்று நடக்கவிருந்த வில்ளையாட்டு போட்டியில் நடுவராக பங்கேற்க இருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இயா மார்ட்டின்ஸ் ஹெர்மான்டே நோமி என்ற பெண் நடுவர் போட்டி தொடங்குவதற்கு முன்னரே போட்டி நடைபெறும் அரங்கத்திற்கு வெளியில் மயக்கம் போட்டு விழுந்தார்.  

image

உதவிக்கு தயாராக ஏற்பாடு செய்யபட்டிருந்த தன்னார்வலர்கள் குழு மயங்கி விழுந்த நடுவரை பார்த்து உதவி செய்து பின்னர் உடனடியாக மருத்துவ குழுவிற்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் உதவியுடன் விரைந்து வந்த மருத்துவ குழுவினர் முதலுதவி செய்து ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடுவர் இயா மார்ட்டின்ஸ் ஹெர்மான்டே நோமியை ஏற்கனவே தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த பூஞ்சேரி மருத்துவ முகாமிற்கு அழைத்து சென்று அவருக்கு அனைத்து மருத்துவ உதவியையும் அளித்தனர். தொடர்ந்து அவருக்கு ஏற்கனவே ஏற்பட்டிருந்த உடல்நல குறைவினாலும் அதிக வெயிலின் காரணமாகவும் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக மருத்துவ குழுவினரால் தெரிவிக்கப்பட்து.

மேலும் நடுவர் இயா மார்ட்டின்ஸ் ஹெர்மான்டே நோமி மருத்துவ கண்காணிப்பில் ஓய்வு எடுத்து வருவதாக தெரிவித்த மருத்துவ குழுவினர் விரைவில் அவர் தங்கும் நட்சத்திர விடுதிக்கு அனுப்பி வைக்கப்படுவார் எனவும் தெரிவித்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.