இந்தியாவில் 6 ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் 15 ஆயிரம் சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, மாநிலங்களவையில் மத்திய வர்த்தக இணையமைச்சர் சோம் பிரகாஷ் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில், நாட்டில் புதுமையான தொழில்முனைவோரை வளர்ப்பதற்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்டார்ட் அப் இந்தியா தொடங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஸ்டார்ட் அப்களை உருவாக்க மாநிலங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Startup Companies rejoice as SEBI approves framework for issue of  differential voting right - Neeraj Bhagat & Co.

இதன் காரணமாக, 2016ஆம் ஆண்டு நாட்டில் 471 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 72 ஆயிரத்து 993 நிறுவனங்களாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 15 ஆயிரம் சதவீதம் அளவுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அசுர வளர்ச்சி பெற்றிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.