குழந்தை தத்தெடுப்புக்காக விண்ணப்பிக்கப்பட்ட 28,663 இந்திய விண்ணப்பதாரர்கள் குழந்தையை தத்தெடுக்க காத்திருக்கின்றனர் எனப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Child

சமீப காலங்களில் குழந்தை தத்தெடுப்பு என்பது மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதே சமயம் குழந்தையை நினைத்த மாத்திரத்தில் எல்லாம் தத்தெடுத்து விட முடியாது. தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் நலன் கருதி பல விதிமுறைகள் மத்திய, மாநில அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளன.

குழந்தையை தத்தெடுக்க அரசின் கீழ் இயங்கும் அமைப்பில் பதிவு செய்யும் தம்பதியருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாவது இருக்க வேண்டும், குழந்தைப்பேறின்மையை உறுதி செய்யும் ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும், தம்பதியினரின் வயது கூட்டுத்தொகையானது 90-க்குள் இருக்க வேண்டும் எனப் பல விதிகள் உள்ளன.

இந்த விதிகளை பூர்த்தி செய்பவர்களுக்கே குழந்தை தத்து கொடுக்கப்படும். மேலும் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களில் உள்ள தத்தெடுப்பு மையங்கள் `காரா’வின் (CARA – Central Adoption Resource Authority)-ன் கீழ் செயல்படும்.

ஸ்மிருதி இரானி

இந்நிலையில் லோக் சபாவில் எழுந்த கேள்விக்கு பதில் அளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி, “1,030 இந்தியர்கள் அல்லாத வெளிநாட்டினர்களிடமிருந்து `காரா’வுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. 2021 முதல் 2022 வரை நாட்டிற்கு உள்ளே 2,991 தத்தெடுப்பு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. நாடுகளுக்கிடையே 414 தத்தெடுப்புகள் நிகழ்ந்துள்ளன. இன்னும் 28,663 இந்திய விண்ணப்பதாரர்கள் குழந்தையை தத்தெடுக்க காத்திருக்கின்றனர்” எனத் தரவுகள் குறிப்பிடுவதாகக் கூறியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.