காரோ… பைக்கோ… அந்த இன்ஜின் சத்தத்தை வைத்தே அது என்ன கார்/பைக், எத்தனை சிலிண்டர்னு சொல்லும் எக்ஸ்பெர்ட்கள் இருக்கிறார்கள். அட, இவ்வளவு ஏன்… மனைவிகள்கூட (‘மனைவின்னா இளக்காரமா போச்சா’னு ஃபெமினிஸம் பார்ட்டிகள் கமென்ட்டில் சண்டைக்கு வரக்கூடாது ஆமா!) பைக் சவுண்டை வைத்தே ‘அவரு வந்துட்டாரு’ என்று தங்கள் கணவரின் வருகையைத் தெரிந்து அலெர்ட் ஆவார்கள்தானே! ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் இது எடுபடாது!

காரணம், இன்டர்னெல் கம்பஸன் இன்ஜின்களைவிட எலெக்ட்ரிக் வாகனங்களின் சத்தம் குறைவு… இல்லை… கிடையவே கிடையாது. ஏனென்றால், இதில் இன்ஜினே கிடையாது. வாகனத்தை ஸ்டார்ட் செய்ததும், ‘அட, ஸ்டார்ட் ஆனதே தெரியலை’ என்று புளகாங்கிதம் அடைந்தாலும், சில நேரங்களில் இந்த ‘வாவ்’ விஷயமே நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு ஆபத்தாக அமைந்து விடுகிறது.

உதாரணத்துக்கு, 20 கிமீ–ல் ஒரு எலெக்ட்ரிக் வாகனம் வருகிறது. டிரைவர் ஹார்ன் அடிக்காத பட்சத்தில் உங்களால் அதை உணர முடியுமா? இது ஆபத்துதானே! இதைக் கருத்தில் கொண்டுதான் இனிமேல் எலெக்ட்ரிக் வாகனங்களில் ஆட்டோமேட்டிக் சவுண்ட் அலெர்ட் கொண்டு வர ஐடியா செய்து கொண்டிருக்கிறது நமது சாலைப் போக்குவரத்துத் துறை.

driving

‘உயர்தர அசைவ/சைவ உணவகம்’ மாதிரி நமது நாட்டுக்கு, ஆட்டோமோட்டிவ் துறைக்கு என ஓர் உயர்தர தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்று இருக்கிறது. அது, CMVR – TSC. (Central Motor Vehicle Rule – Technical Standing Commitee).இந்தக் கமிட்டியில் உள்ளவர்கள், டெக்னிக்கல் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவர்களின் யோசனையின் பெயரில்தான் இப்படி ஒரு சட்டம் வர இருக்கிறது. நமது வண்டியின் ஹார்ன் டெஸிபல் இவ்வளவுதான் லிமிட் இருக்க வேண்டும்; எக்ஸாஸ்ட்டில் இருந்து இதற்கு மேல் சத்தம்/புகை வரக்கூடாது என்பதை நிர்ணயம் செய்வது இந்தக் கமிட்டி. இதை QRTV (Quiet Road Transport Vehicles) என்கிறார்கள். நமது சாலை அமைச்சகம், தனது வலைதளத்தில் இதற்கான ஐடியாக்களை எக்ஸ்பெர்ட்களிடமும் ஸ்டேக்ஹோல்டர்களிடம் இருந்தும் தேடியதன் விளைவாக ஓர் யோசனை தோன்றியிருக்கிறது. அதாவது, 20 கிமீ–க்குள் போகும் எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து ஆட்டோமேட்டிக்காக சத்தம் வர வேண்டும். இதன் மூலம் பாதசாரிகள் அலெர்ட் ஆவார்கள்தானே!

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இவை ஏற்கெனவே அமுலில் இருக்கின்றன. இந்தியாவும் இப்போதைக்கு எலெக்ட்ரிக் மொபிலிட்டியில் முன்னேறி வரும்பட்சத்தில், இதை நாமும் கடைப்பிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ‘‘இன்டர்நேஷனல் தரத்துக்கு நாமும் முன்னேற வேண்டியிருக்கிறது. வாகன உற்பத்தியாளர்கள், வாகனங்களைத் தயாரிக்கும்போதே, 20 கிமீ–க்குள் போகும்போது சவுண்ட் வருவதுபோல் அலெர்ட் சிஸ்டம் செய்து இதற்கான முன்னெடுப்புகளைச் செய்துவிட்டால்… வேலை மிச்சம்.’’ என்கிறார் ஓர் அரசுத் தரப்பு அதிகாரி.

Electric Scooter

எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாகப் போகும்போது, டயர்களின் சத்தமோ… காற்றின் சத்தமோ… பெல்ட் டிரைவின் சத்தமோ அலெர்ட் செய்துவிடும். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு ஏத்தர் பைக்கின் சத்தத்தைக் கேட்டால் தெரியும். பெல்ட் டிரைவ் மூலம் ஓடும் இது, மெட்ரோ ரயிலில் இருந்து சத்தம் வருவதுபோல்.. ‘ஷ்ய்ய்ய்ங்ங்ங்’ என்று சத்தம் போடும். ஆனால், இது 30 கிமீ–யைத் தாண்டிய பிறகுதான். இதுவே 20 கிமீ–க்கு உள்ளே அந்த ஏத்தர் வருவதைக் கண்டுபிடிக்கவே முடியாது. இதற்கும் ஆட்டோமேட்டிக்காக ஒரு சவுண்ட் அலெர்ட் வந்தால்… பாதசாரிகள் அலெர்ட் ஆகி, காயங்களில் இருந்து தப்பிக்கலாம் என்பது நல்ல விஷயம்தானே!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.