ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை தருவதாக கூறி வாக்கு கோரும் போக்கு நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பந்தேல்கண்ட் அதிவிரைவுச் சாலையை தொடங்கிவைத்து பிரதமர் பேசினார். இனிப்பு தருவது போல இலவச திட்டங்களை வழங்கும் அறிவிப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் பேசினார். மக்கள் நலனுக்கு இலவசங்களை விட ரயில்கள், சாலைகள், தொழிற்சாலைகள் போன்ற கட்டமைப்பு வசதிகளே அவசியமானவை என்றும் அவர் பேசினார்.

Revari culture could be…': At Bundelkhand event, PM warns against freebies  | Latest News India - Hindustan Times

உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள இரட்டை இன்ஜின் அரசால்வளர்ச்சிப்பணிகள் விரைவாக நடந்து வருவதாக பிரதமர் பேசினார். தற்போது ஏற்படுத்தப்பட்டு வரும் கட்டமைப்பு வசதிகள் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் பிரதமர் விளக்கினார். உத்தரப்பிரதேசத்தின் பந்தேல்கண்ட் பகுதியில் 14 ஆயிரத்து 850 கோடி ரூபாய் செலவில் 296 கிலோ மீட்டர் நீளத்திற்கு பிரமாண்டமான அதிவிரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி 28 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Stop 'Free Revdi Culture', Heritage Enough for UP's Growth: What Modi Said  at B'khand E-way Launch

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.