Hard Work என்ற கருத்திலிருந்து Smart Work என்ற நிலைக்கு வந்துவிட்டோம். பணம் சம்பாதிப்பதற்கும் தற்போது பல ஸ்மார்ட் வொர்க்குகள் வந்துவிட்டன. இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் அதிகம் கொண்டவர்கள் சில பொருள்களை மார்க்கெட்டிங் செய்து வீட்டிலிருந்தே லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். அதே போல் யூடியூப் சேனல்களில் எளிமையான மனிதர்கள்கூட வீடியோக்களின் மூலம் பல லட்சம் சம்பாதிக்கின்றனர்.

Social media

சமூக வலைதளங்கள் தாண்டி மொழி பெயர்ப்பு, கேமிங், வீடியோ எடிட்டிங் , ஆன்லைன் கோர்ஸ்கள் எடுப்பது என்று நமக்குத் தெரிந்த விஷயங்களை, நம்முடைய திறமைகளையே மூலதனமாக்கி வருமானம் ஈட்ட பல வழிகள் இருக்கின்றன.

படிப்பை முடித்து ஒரு நிறுவனத்தில் மாதச் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்து சில ஆயிரங்கள் சம்பாதிப்பதைவிட, கூடுதல் வருமானம் தரக்கூடிய ஐடியாக்களை தெரிந்துகொண்டால், படிக்கும்போதே கணிசனமான வருமானம் ஈட்டுவது சாத்தியம்தான்.

business

இதுபோன்ற ஐடியாக்களைத் தேர்வு செய்யும்போது, புதிதாக கற்றுக் கொள்வதை விட நமக்கு எதில் திறமை இருக்கிறது, எது சார்ந்து நம்மால் இயங்க முடியும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். சென்னையச் சேர்ந்த சரண் என்ற மாணவருக்கு டிரம்ஸ் வாசிப்பதில் அதிக ஆர்வம்.

நிகழ்ச்சிகளில் டிரம்ஸ் வாசிப்பது, போட்டிகளில் பங்கேற்பது என வழக்கமான வழிமுறைகளை உடைத்து ஆறாம் வகுப்பு படிக்கும்போதே ‘ Drums Circle’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி ஆறு வருடங்களாக அந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

college students (representational image)

சரண் ஓர் உதாரணம் மட்டுமே. நமக்குள்ள திறமைகளை அடிப்படையாக வைத்து, சிறிது முயற்சி எடுத்தால், கல்லூரியில் படிக்கும்போதே சம்பாதிப்பது எல்லாருக்கும் சாத்தியம்.

திறமையை எப்படி மூலதனமாக மாற்றுவது, ஏமாறாமல் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள், சமூகவலைதளங்களின் மூலம் பணம் சம்பாதிக்கும் நுணுக்கங்கள், உத்திகள் என பல்வேறு விஷயங்களைக் கற்றுத்தரும் வகையில் அவள் விகடன் சார்பில் படிக்கும்போதே Part time பிசினஸ்! – என்ற ஆன்லைன் பயிற்சி கல்லூரி மாணவர்களுக்காக எக்ஸ்க்ளூசிவ்வாக நடைபெறவுள்ளது.

Sakthivel Pannerselvam

ஜூலை 30-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4 முதல் 5 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கெட்டிங் எக்ஸ்பெர்ட் சக்திவேல் பன்னீர் செல்வம் பயிற்சியை வழங்க உள்ளார்.

பயிற்சியில் பங்கேற்க க்ளிக் செய்யவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.