நடப்பு நிதியாண்டின் 2ஆவது பாதியில் பணவீக்கம் கட்டுக்குள் வரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.பணவீக்கத்தை 6 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்காரணமாக, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 4.9 சதவிகிதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

Shaktikanta Das to start his extended 3-year tenure as RBI governor -  Hindustan Times

இந்நிலையில். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சக்தி காந்ததாஸ், நடப்பு நிதியாண்டின் 2ஆவது பாதியில் பணவீக்கம் கட்டுக்குள் வரும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து மேற்கொள்ளும் எனவும் சக்தி காந்ததாஸ் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.