கூடங்குளத்தில் இரண்டு அலகுகளில் எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற உள்ளதால், மின்சார பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பற்றாக்குறை மின்வெட்டுக்கு வழிவகுத்து விடும் என்பதால் தனியாரிடம் மின்சாரம் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் மின் தேவை அதிகரித்து வருவதால் கூடங்குளம் இரண்டு செயல்பாட்டு அலகுகளின் எரிபொருள் நிரப்பும் சுழற்சியை ஏப்ரல்-மே மாதங்களுக்கு பதிலாக ஜூலை-ஆகஸ்ட் வரை மாற்றுமாறு இந்திய அணுசக்தி கழகத்தை (என்பிசிஐஎல்) தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான டான்ஜெட்கோ கேட்டுக் கொண்டுள்ளது. தலா 1000 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அலகுகளில் மறுசுழற்சி செயல்முறையை முடிக்க குறைந்தது 2 முதல் 3 மாதங்கள் ஆகும் என்பதால் இந்த மாற்றத்தை செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளது.

TANGEDCO Jobs: Recruitment Of 2900 Field Assistants For 2021 By The Tamil  Nadu Generation And Distribution Corporation Limited - Check Details

இரண்டு அலகுகளும் மூடப்பட்டுள்ளதால், உச்சகட்டத் தேவையைப் பூர்த்தி செய்ய தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்க வேண்டியிருப்பதால், மின் தேவை உச்சத்தில் இருக்கும் மாதங்களில் கிட்டத்தட்ட 1000 மெகாவாட் கிடைக்காது என்று டான்ஜெட்கோ குறிப்பிட்டுள்ளது. எரிபொருள் நிரப்பும் சுழற்சியை ஜூலை-ஆகஸ்ட் என மாற்றினால், அம்மாதங்களில் காற்றாலை மின் உற்பத்தி இருப்பதால் டான்ஜெட்கோ எளிதாக பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என இந்திய அணுசக்தி கழகத்திற்கு டான்ஜெட்கோ கடிதம் எழுதி ஒரு மாதத்திற்கு மேலாகியும், இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

NPCIL Recruitment 2020: 206 jobs for degree and diploma holders .. Nuclear  Power Corporation releases advertisement ..! - npcil recruitment 2020 apply  online for 206 job vacancies at npcilcareers.co.in - Rojgar Samachar |

இதனிடையே, ஜூலை 14-ம் தேதி சென்னையில் தெற்கு மண்டல மின்வாரியக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பங்கேற்கின்றன. “ஜூலை 14 ஆம் தேதி இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவோம், மேலும் எரிபொருள் நிரப்புதல் சுழற்சியை ஜூலை-ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்ற வேண்டும் என்று மத்திய மின் அமைச்சகத்தின் பிரதிநிதிகளுக்குத் தெரிவிப்போம். கூட்டத்தில் நாங்கள் எழுப்ப விரும்பும் பிற சிக்கல்களும் உள்ளன” என்று மூத்த அதிகாரி கூறினார்.

– செய்தியாளர்: சிவகுமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.