காலநிலை மாற்றத்தை தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் மறுசுழற்சி முறையில் கையிலெடுத்து, அன்றாடம் பயன்படுத்தும், சாப்பிடும் பொருட்களை விநோதமான முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஒரு புதுமையான கண்டுபிடிப்பு பற்றிதான் தற்போது காணப் போகிறோம்.

பொதுவாக பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்வதோ, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போன்றவற்றை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஏன் டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இருவர் உணவுக் கழிவுகளில் இருந்து கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் சிமெண்ட்டையே உருவாக்கியிருக்கிறார்கள்.

image

ஆனால் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் சிங்கப்பூரில் கழிவு நீரில் இருந்து மதுபானமான பீர் தயாரித்திருக்கிறார்கள். அதையும் அந்த நாட்டு மக்கள் வேண்டி விரும்பி வாங்கி குடிக்கிறார்கள். கேள்விப்படும் போதே முகம் சுழிப்பா இருக்கிறதா? ஆனால் இதுதான் உண்மை.

சிங்கப்பூரின் தேசிய நீர் நிறுவனமான PUB-ம் , மதுபான நிறுவனமான Brewerk-ம் இணைந்துதான் இந்த தயாரிப்பை மேற்கொண்டு அதனை சந்தைப்படுத்தியிருக்கிறார்கள்.

முதல்முறையாக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற நீர் மாநாட்டில்தான் இந்த புதுவகை பீர் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவலால் தாமதமாகி கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் சிங்கப்பூரின் சூப்பர் மார்க்கெட்டிலும், Brewerks-ன் கடைகளிலும் விற்கப்பட்டு வருகிறது.

image

சிங்கப்பூர் மக்களின் விருப்பமான மதுபானமாக மாறியுள்ள இந்த பீருக்கு NEWBrew என பெயரிட்டிருக்கிறார்கள். இந்த பீர் முழுக்க முழுக்க சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் NEWater-ல் இருந்து தயாரிக்கப்பட்டதுதான் இந்த NEWBrew என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2003ம் ஆண்டு நீர் பாதுகாப்பை மேம்படுத்த சிங்கப்பூரில் மறு சுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி சுத்திகரிக்கப்பட்ட நீரில் இருந்துதான் மக்களின் அமோக வரவேற்பை பெற்ற Newbrew பீர் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

புற ஊதா ஒளி (Ultraviolet light) மூலம் கழிவுநீரில் இருக்கும் கிருமிகளை நீக்கி, அதில் உள்ள அசுத்தமான துகள்களை அகற்ற மேம்பட்ட சவ்வுகள் வழியாக திரவத்தை அனுப்புவதன் மூலம் NEWater தயாரிக்கப்படுகிறது. அந்த நியூவாட்டரை கொண்டுதான் நியூப்ரு பீரும் தயாரிக்கப்படுகிறது.


இந்த பீரை வாங்கிக் குடிக்கும் மக்களோ சுவையாக இருப்பதாகவும், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரால்தான் இது தயாரிக்கப்பட்ட உணர்வே இல்லை என்றும் கூறுகிறார்களாம். மேலும், சந்தைப்படுத்தப்பட்ட அனைத்து நியூப்ரு பீரும் விற்றுத் தீர்ந்துவிட்டதால் அடுத்தடுத்த உற்பத்தியில் brewerks நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, மக்களிடையே நீர் பயன்பாடு குறித்த முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலேயே இதுப்போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ: 

எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.