தொழில் சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்திய முதன்மை மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு இடம் கிடைத்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், அரியானா, கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா மாநிலங்கள் முதன்மை மாநிலங்களாக திகழ்கின்றன.

தொழில் சீர்திருத்த செயல்திட்ட அடிப்படையில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் வெளியிட்டார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட இந்த பட்டியலில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், குஜராத், அரியானா, கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா ஆகிய 7 மாநிலங்கள் சிறந்த முதன்மை மாநிலங்களாக திகழ்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேபோன்று இமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் சிறந்த சாதனையாளர்கள் பிரிவிற்கு அடுத்தப்படியாக இருக்கிறது. அதாவது தொழில் சீர்திருத்த திட்டங்களை வேகமாக அமல்படுத்தி வரும் மாநிலங்களாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வணிகம் செய்வதற்கு தற்போது வளர்ந்து வரும் சூழல் பிரிவில் பீகார், சத்தீஸ்கர், டெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர் மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து, மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார், டாமன் டையூ, தாத்ரா, புதுச்சேரி யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன.

image

தொழில் சீர்திருத்த செயல்திட்டம் 2020, தகவல் பெறுதல், ஒற்றைச்சாளர நடைமுறை, தொழிலாளர், சுற்றுச்சூழல், துறை சார்ந்த சீர்திருத்தங்கள் மற்றும் வழக்கமான தொழிலுக்கான வாழ்க்கை சுழற்சி சார்ந்த பிற சீர்திருத்தங்கள் போன்ற 15 தொழில் ஒழுங்குமுறை பிரிவுகளைக் கொண்ட 301 சீர்திருத்த அம்சங்களை உள்ளடக்கியதாகும். துறை சார்ந்த சீர்திருத்தங்கள் முதன் முறையாக தொழில் சீர்திருத்த செயல்திட்டம் 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.  இதில் வணிக உரிமம், சுகாதார சேவை, சட்டப்பூர்வ எடை அளவியல், திரையரங்குகள், விருந்தோம்பல், தீயணைப்பு தடையில்லா சான்றிதழ், தொலைத் தொடர்பு, திரைப்படப் படப்பிடிப்பு மற்றும் சுற்றுலா ஆகிய ஒன்பது துறைகளில் 72 சீர்திருத்தங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தது.

image

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்றதிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்துவதற்காக உந்துதலை கொடுத்தார். அந்த பலன் இன்று அனுபவிக்கப்படுகிறது. ஒரு சில பகுதிகள், நகரங்களில் மட்டுமே எளிதாக வணிகம் செய்வதை விட போட்டி, கூட்டாட்சி மற்றும் ஒத்துழைப்பின் உணர்வின் மூலம் இது நாடு முழுவதும் பிரதிபதிக்கப்படுவதை நாங்கள் காண்கிறோம் என்றார்.

– விக்னேஷ் முத்து

இதையும் படிக்கலாம்: உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.