உத்தரப் பிரதேச தேர்தல் மோசமான தோல்வியை சந்தித்து இருந்தாலும், நீங்கள் போராடிய விதம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்வேகம் அளித்தது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மாநில அளவிலான ’நவ சங்கல்ப்’ எனப்படும் தொண்டர்களுடன் உரையாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்முதலாக தொண்டர்களிடம் பேச கிடைத்துள்ள இந்த வாய்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் “உத்தரப் பிரதேச தேர்தலில் நாம் தோல்வி அடைந்திருந்தாலும், வெற்றிக்காக ஒவ்வொரு உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் கடுமையாக போராடினார்கள் என்ற பெயரையே பெற்றிருக்கிறோம்.

image

இதையும் படிங்க… மது போதையில் தகராறு செய்தவர்கள் மீது லாரியை ஏற்றிக் கொன்ற வடமாநில ஓட்டுநர்

ஆகவே அடைந்த தோல்வியை நினைத்து, அது குறித்து இன்னமும் நாம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தேவையான அளவிற்கு பொதுமக்களை அணுக நீங்களும் முயற்சிகள் செய்தீர்கள். பொது மக்களுக்காக குரல் கொடுத்தீர்கள். பலர் சாலைகளில் வந்து போராடி சிறை சென்றீர்கள். எவ்வளவு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் கட்சியின் சித்தத்துடன் இருக்கிறீர்கள். இதுவே மிகப் பெரிய சாதனை. இருப்பினும் நாம் இன்னமும் ஆழமாக வேலை செய்யவேண்டும். இன்னும் இரண்டு மடங்காக உழைக்க வேண்டியிருக்கும் என்பதை இந்த முடிவின் மூலம் நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். எனவே கட்சியின் பல மட்டங்களில் மாற்றங்களை செய்ய முடிவெடுத்து இருக்கிறோம். இன்னும் பொதுத் தேர்தலுக்கு இரண்டு வருடங்கள்தான் இருக்கிறது. அதற்குள் நாம் நம்மை இன்னும் முழுமையாக தயாராக்கிக் கொள்ள வேண்டும்” என அவர் பேசினார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.