தெற்கு சிலியில் உள்ள காடு ஒன்றில் 5,484 ஆண்டுகள் பழமையான ஒரு மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஒரு புதிய ஆய்வின்படி உலகின் மிகப் பழமையான மரம் இது என்று நம்பப்படுகிறது.

“பெரிய தாத்தா” என்று அழைக்கப்படும் இந்த பழங்கால அலர்ஸ் மரம் 5,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்த மரம் கலிபோர்னியாவில் உள்ள 4,853 ஆண்டுகள் பழமையான பிரிஸ்டில்கோன் பைன் மரத்தின் சாதனையை முறியடிக்கும்.

Is the world's oldest tree growing in a ravine in Chile? | Science | AAAS

இந்த மரத்தின் மிகப்பெரிய சுற்றளவின் காரணமாக, மர வளையங்களின் அடிப்படையில் விஞ்ஞானிகளால் சரியான வயதைக் கண்டறிய முடியவில்லை. பொதுவாக, மர வளையங்களின் எண்ணிக்கையை எண்ணுவதற்கு 1 மீட்டர் (1.09 கெஜம்) மர உருளை பிரித்தெடுக்கப்படுகிறது. ஆனால் பெரிய தாத்தா எனும் இந்த மரத்தின் தண்டு 4 மீட்டர் விட்டம் கொண்டது.

இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய விஞ்ஞானி ஜோனதன் பரிச்சிவிச், அவர்கள் பிரித்தெடுத்த மாதிரி மற்றும் பிற டேட்டிங் முறைகள் மூலம் இந்த மரம் 5,484 ஆண்டுகள் பழமையானது என்று கூறுகின்றன. மேலும், “அனைத்து வளையங்களையும் நாம் ஏற்கெனவே சோதனை செய்த மரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அது இந்த கிரகத்தின் பழமையான மரங்களில் ஒன்றாக மாறும்” என்று பரிச்சிவிச் கூறினார்.

The Oldest Tree in the World Might Have Been Found in Chile, and It's Dying  - NewsBreak

தேசிய பூங்காவில் உள்ள அலர்ஸ் கோஸ்டெரோ மரத்தின் பாதுகாப்பு குறித்து கவலைப்படும் பரிச்சிவிச், “மனித நாகரிகத்தின் பல காலகட்டங்களில் இந்த மரம் தப்பிப்பிழைத்தாலும், தற்போது பார்வையாளர்கள் பெரும்பாலும் கண்காணிப்பு பகுதியை தாண்டி வந்து மரத்தின் வேர்களை மிதித்து, அதன் பட்டை மற்றும்  துண்டுகளை கூட எடுத்து செல்கிறார்கள். இத்தகைய சேதங்களை தடுப்பதற்காக அமெரிக்காவில் இதே போன்ற மரங்களின் இருப்பிடத்தை மறைத்து வைத்திருக்கிறார்கள். 5,000 ஆண்டுகள் வாழ்வதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி ஒரு நொடியின் ஒரு பகுதியாவது மக்கள் சிந்திக்க வேண்டும்” என அவர் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.