365 கோடியில் பழமை மாறாமல் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த பழமையான ரயில் நிலையத்தின் வழியாக தினமும் சுமார் 120 இரயில்கள் சென்னை மார்க்கமாவும், ஜோலார்பேட்டை மார்க்கமாகவும், திருப்பதி மார்க்கமாகவும், வேலூர் மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள மிக முக்கிய ரயில்வே சந்திப்புகளில் காட்பாடி ரயில் நிலையமும் ஒன்று. கொரோனா பேரிடர் காலத்தில் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தபோது முதல்முதலாக இந்தியாவிலேயே வெளி மாநிலத்தாரை அரசு செலவில் அனுப்பிவைத்த முதல் ரயில் காட்பாடியில் இருந்து தான் இயக்கப்பட்டது.

image

image

இந்த நிலையில் நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டதையடுத்து நாடு முழுவதும் முதற்கட்டமாக 50 ரயில் நிலையங்கள் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் காட்பாடி, சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக மத்திய ரயில்வே மந்திரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

image

அவ்வாறு மேம்படுத்தப்பட உள்ள ரயில் நிலையங்களில் ஒன்றாக காட்பாடி ரயில் நிலையமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தின் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் நாட்டினார்.

image

இதன்பிறகு தரம் மேம்படுத்தப்பட உள்ள காட்பாடி ரயில் நிலையத்தின் முகப்பு தோற்றம் புதிதாக அமைக்கப்பட உள்ளது. மேலும் காட்பாடி ரயில் நிலையத்தில் புதிதாக சப்வே, நவீனப்படுத்தப்பட்ட பார்க்கிங் வசதிகள், கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள், ஓய்வு அறைகள், கழிவறைகள் உள்பட பல்வேறு வசதிகள் நவீனப்படுத்தப்பட உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.