குஜராத்தில் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்துகள் சீன ராக்கெட்டின் எச்சங்களாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக குஜராத்தில் உள்ள சில கிராமங்களில் வானத்தில் இருந்து நான்கு உருண்டை உலோகப் பந்துகள் விழுந்தன. சுமார் 1.5 அடி விட்டம் கொண்ட வெற்று உலோகக் பந்துகள் மே 12 முதல் 13 வரை குஜராத்தில் ஆனந்த் மாவட்டத்தின் டாக்ஜிபுரா, கம்போலாஜ் மற்றும் ராம்புரா கிராமங்களிலும், அண்டை மாவட்டமான கெடா மாவட்டத்தின் பூமெல் கிராமத்திலும் விழுந்ததது. உலோகப் பந்துகள் வானத்தில் இருந்து விழுந்த போதிலும் நல்வாய்ப்பாக பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

It's a bird. It's a plane...': Mysterious metal balls raining in Gujarat,  likely space debris - India News

“எங்கள் முதன்மை பகுப்பாய்வு இந்த உலோக பந்துகள் செயற்கைக்கோளுக்கு சொந்தமானது என்று பரிந்துரைத்தது. மேலும் ஆய்வுக்கு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) மற்றும் அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை அணுக முடிவு செய்துள்ளோம்,” என்று துணைக் காவல் கண்காணிப்பாளர் பி.டி. ஜடேஜா கூறினார். அமெரிக்காவைச் சேர்ந்த வானியலாளர் ஜோனதன் மெக்டொவல் மே 12 அன்று பதிவிட்ட ஒரு ட்வீட்டில், இந்த உலோகக் கோளங்கள் பொதுவாக CZ 3B என அழைக்கப்படும் சாங் ஜெங் 3B என்ற சீன ராக்கெட்டின் சிதைவுகளாக இருக்கலாம் என்று கூறினார்.

Explained: What do we know about the debris that 'fell from the sky' in  Gujarat? | Explained News,The Indian Express

ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி பிஎஸ் பாட்டியா கூறுகையில், இந்த உலோகப் பந்துகள் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களில் திரவ எரிபொருளான ஹைட்ரஜனைச் சேமிக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருள் கலன்களாக இருக்கலாம். வழக்கமாக, ராக்கெட்டில் உள்ள வெற்று சேமிப்பு கலன்கள் எரிபொருள் முழுவதுமாக தீர்ந்த பிறகு தானாகவே பிரிந்து தரையில் விழும் வகையில் வடிவமைக்கப்படும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.